அனில் குமார் சந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் குமார் சந்தா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967-1971
பின்னவர்சர்தீஷ் ராய்
தொகுதிபோல்பூர் (மக்களவைத் தொகுதி), மேற்கு வங்காளம்
பதவியில்
1952-1962
பின்னவர்சிசிர் குமார் தாஸ்
தொகுதிபிர்பம் மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-05-23)23 மே 1906
சில்சார், அசாம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு21 ஏப்ரல் 1976(1976-04-21) (அகவை 69) [1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராணி சந்தா
மூலம்: [1]

அனில் குமார் சந்தா (Anil Kumar Chanda) (பிறப்பு 23 மே 1906-21 ஏப்ரல் 1976) இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வெளியுறவுத்துறை துணை அமைச்சராகவும், பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சகத்தில் வேலைகள், வீட்டுவசதி மற்றும் வழங்கல் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராகவும் இருந்தார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸில் படித்து சாந்திநிகேதனில் இரவீந்திரநாத் தாகூரின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். இவரும் இவரது மனைவி ராணி சந்தாவும் (1912-1997) அவரது வாழ்க்கையின் கடைசி பதின்ம ஆண்டுகளில் இரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய தோழமைகளாக இருந்தனர். இராணி சந்தா அந்த காலத்தின் சில அழகான நினைவுகளை வங்காள வாசகர்களுக்கு பரிசளித்தார். இவர்களுக்கு அபிஜித் சந்தா என்ற ஒரு மகன் இருந்தார். அவர்கள் இறுதியில் சாந்திநிகேதனில் குடியேறினர். [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 82. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 24 March 2020. 
  2. Ashish Bose (7 June 2010). Head Count: Memoirs of a Demographer. Penguin Books Limited. பக். 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-228-1. https://books.google.com/books?id=8jP04qUTfM8C&pg=PT20. பார்த்த நாள்: 8 January 2019. 
  3. Trilochan Singh. Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. https://books.google.com/books?id=PFvVAAAAMAAJ. பார்த்த நாள்: 8 January 2019. 
  4. Sir Stanley Reed. The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. https://books.google.com/books?id=lXEiAQAAIAAJ. பார்த்த நாள்: 8 January 2019. 
  5. India. Parliament. House of the People. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 3711–. https://books.google.com/books?id=D2TVAAAAMAAJ&pg=PA3711. பார்த்த நாள்: 8 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_சந்தா&oldid=3210530" இலிருந்து மீள்விக்கப்பட்டது