அனில் அகர்வால் (சுற்றுச்சூழலியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனில் அகர்வால் (ஆங்கிலம்: Anil Agarwal 23, நவம்பர் 1947-2 சனவரி 2002) இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார்.[1] இவர் 1947 ஆம் ஆண்டு, நவம்பர் 23 ஆம் தேதி அன்று, கான்பூரில் பிறந்தவர். இவர் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் படிப்பை முடித்தவர். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் அறிவியல் நிருபராகப் பணிபுரிந்தார். இவர் டவுண் டு எர்த் (Down to Earth) அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான இதழைத் தொடங்கினார். அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளளார். இவர் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி, தனது 54வது வயதில், புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. https://www.theguardian.com/news/2002/jan/11/guardianobituaries.india
  2. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. 10 May 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.