உள்ளடக்கத்துக்குச் செல்

அனிருத்தன் வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிருத்தன் வாசுதேவன் (Aniruddhan Vasudevan) சென்னை, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆங்கில எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர் என செயல்படுகிறார்.[1][2][3] தனது பாலினம், பாலியல்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காவும் எழுத்துக்காவும் அறியப்படுகிறார். இவர் இவ் விடயங்கள் தொடர்பாக செயற்படும் சக்தி வள நடுவம் என்ற ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை மொழிபெயர்த்ததற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற அனிருத்தன் வாசுதேவன், அந்த விருதை நிராகரித்தார்.[4] பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வரும் கனடா-தமிழ் இலக்கியத் தோட்டமும் 2013 ஆம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பாளர் விருதை அனிருத்தன் வாசுதேவனுக்கு வழங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srilata, K. (2017-11-11), "Songs of a Coward: Poems of Exile By Perumal Murugan trs Aniruddhan Vasudevan reviewed by K. Srilata", The Hindu (in Indian English), ISSN 0971-751X, retrieved 2023-12-31
  2. "Perumal Murugan (Aniruddhan Vasudevan Tr.) Quotes", www.goodreads.com, retrieved 2023-12-31
  3. "Aniruddhan Vasudevan", www.goodreads.com, retrieved 2024-06-23
  4. "Upset by legal wrangle, Sahitya Akademi winner Aniruddhan Vasudevan declines award", The Indian Express (in ஆங்கிலம்), 2018-01-31, retrieved 2023-12-31

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்தன்_வாசுதேவன்&oldid=4193250" இலிருந்து மீள்விக்கப்பட்டது