அனிமோமீட்டர்
Jump to navigation
Jump to search
அனிமோமீட்டர் (anemometer) என்பது காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி ஆகும். கிரேக்க மொழியில் anemos என்பது காற்றைக் குறிக்கும் சொல் ஆகும். அனிமோமீட்டர் பற்றி முதன் முதலில் 1450 இல் லெயோன் பட்டிஸ்டா ஆல்பெர்ட்டி என்பவர் எடுத்துரைத்தார்.
அமைப்பு[தொகு]
இக்கருவியில் சுழலும் தண்டு ஒன்றுடன் அலுமினியக் கிண்ணங்கள் இணைக்கப்பட்டிருக்கும். காற்றின் வேகம் அதிகரிக்கும் போது கிண்ணங்கள் அதிவேகத்துடன் சுழலும்.
பயன்கள்[தொகு]
வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயல், சூறாவளி போன்றவற்றை கணிக்க உதவுகிறது. விமான நிலையங்களில் விமானம் தரையிரங்க இக்கருவி உதவுகிறது.