அனிமா சவுத்ரி
அனிமா சவுத்ரி (அசாமி : ড৹ অনিমা பிறப்பு: பிப்ரவரி 28, 1953) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த பாடகியாவார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவரது இசைப் பயணம் நவீன அசாமிய பாடல்களிலும், நாட்டுப்புற கலைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது.[1] இவருக்கு லூயிட் குவாரி”, "ஜான் டிமாலி உள்ளூர் மற்றும் மாநில அளவிலான இசை மற்றும் கலாச்சார அங்கீகாரங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 'டிகவ் நொயர் பரோர்', 'லாக் தியார் கோத்தா அசில்' மற்றும் 'இ பிரன் கோபால்' என்பன இவரது மிகவும் பிரபலமான பாடல்களில் சிலவாகும்.
அனிமா சவுத்ரி இசையைப் போன்றே கல்வியிலும் ஆர்வமுள்ளவர். இவருக்கு குவஹாத்தி பல்கலைக்கழகத்தினால் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சவுத்ரி 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று தண்டிராம் சவுத்ரி மற்றும் ஹேமலதா சவுத்ரி ஆகிய இணையருக்கு அசாம் மாநிலத்தின் நல்பரியில் நிஸ் பக்கோவா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அனிமாவின் தந்தை நாகானில் ஒரு அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தார். ஏழு உடன்பிறப்புகளுடன் குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக வளர்ந்தார். இவர் தொடக்கக் கல்வியையும், இசைப் பாடங்களையும் நாகானில் பயின்றார். அனிமா இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் பாரம்பரிய அசாமி இசை குறித்த ஆரம்ப விழிப்புணர்வைத் தொடங்கினார். இவரது தந்தை இந்திய பாரம்பரிய இசையின் மீது ஆர்வமிக்கவராக இருந்ததால் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தொழில்முறை பயிற்சி பெற ஊக்குவித்தார்.
அனிமா சவுத்ரி சுஷில் பானர்ஜியின் இசைப் பள்ளியில் தனது ஆரம்பகால பயிற்சியைப் பெற்றார். 1963 ஆம் ஆண்டில் அவரது தந்தை குவஹாத்திக்கு இடம் மாற்றப்பட்டபோது ஹிரென் சர்மாவின் கீழ் பாரம்பரிய இசையில் பயிற்சிப் பெறத் தொடங்கினார். சர்மாவின் மரணத்திற்குப் பிறகு தாமோதர் போராவின் கீழ் தனது மரபார்ந்த இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். பாடகர் நிரோட் ராயிடமிருந்து பயிற்சியையும், அகில இந்திய வானொலியின் பாரம்பரிய பாடகரான நிருபன் கங்குலியின் கீழ் தும்ரி மற்றும் பஜனை ஆகியவற்றுக்கும் பயிற்சி பெற்றார். [சான்று தேவை]
கல்வி
[தொகு]சவுத்ரி 1972 ஆம் ஆண்டில் குவஹாத்தியின் காட்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையில் குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும் 1999 ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றார். 2013 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை கம்ரூப் சாய்கான் கல்லூரியில் இணை பேராசிரியராகவும் பின்னர் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் இருந்தார். [சான்று தேவை]
இவர் பல சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் கலாச்சாரம் மற்றும் இசை தொடர்பான பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். [2][3]
இசைப் பயணம்
[தொகு]1969 ஆம் ஆண்டில் காட்டன் கல்லூரியின் இசை போட்டியில் சவுத்ரி பங்கேற்றார். மாநிலம் தழுவிய இந் நிகழ்ச்சியில் இசை இயக்குனர் ராமன் பாருவாவின் கவனத்தை ஈர்த்தார். அவர் 1970 ஆம் ஆண்டில் அசாமிய திரைப்படமான முகுட்டாவில் பின்னணி பாடகியாக ஒரு வாய்ப்பை வழங்கினார். இத் திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடினார். இப்பாடல்கள் அசாமில் மிகவும் பிரபலமாகின. [சான்று தேவை] இத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் பதிவு நிறுவனமான எச்.எம்.வி சவுத்ரியை தங்கள் பதாகையின் கீழ் பாடல்களையும், இசைத் தொகுப்புக்களையும் பதிவு செய்ய அழைத்தது. அவர் பல அசாமி நவீன பாடல்களை எச்.எம்.வி உடன் பதிவு செய்தார். புட்டலாகர், பிரேம் ஜனம் ஜனமே, அக்னிப்ரிஸ்டி, மோர் மராமேர், மற்றும் சிபா மஹிமா உள்ளிட்ட பிற அசாமிய திரைப் படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டில் திரிதாரா என்ற வங்காள திரைப் படத்திற்காக பின்னணி பாடலையும் பாடினார். மேலும் தொலைக்காட்சி நாடகங்களில் மா மனசா, தேவி, வந்தானந்த் ஆகியோருக்காக குரல் கொடுத்துள்ளார். [சான்று தேவை]
அனிமா குழந்தை பருவத்திலிருந்தே, அவர் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். , 1972 ஆம் ஆண்டில் அவர் அங்கீகரிக்கப்பட்ட வானொலி கலைஞரானார். [சான்று தேவை] தற்போது அவர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் 'ஏ-கிரேடு' கலைஞராக உள்ளார். [சான்று தேவை] ஏ.ஐ.ஆர் மற்றும் தூர்தர்ஷனில் நிகழ்ச்சிகளை வழங்குகிறார். 1989 ஆம் ஆண்டில் கட்டக் தூர்தர்ஷன் ஏற்பாடு செய்த தூர்தர்ஷனின் தேசிய நிகழ்ச்சியில் அசாமை பிரதிநிதித்துவப்படுத்தினார். [சான்று தேவை] அமெரிக்காவில் உள்ள இந்திய / அசாமி அமைப்புகளால் அஸ்ஸாமி இசை பாரம்பரியத்தின் தூதராக கலந்துக் கொண்டார். [4]
சான்றுகள்
[தொகு]- ↑ "ASSAM: The Natural and Cultural Paradise".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Proceedings of North East India History Association".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Journal of the Assam Research Society".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Assamese Get-Together, San Francisco: A Report" (PDF). Archived from the original (PDF) on 2017-12-16.