அனிந்திதா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிந்திதா பால்
2016 ஆம் ஆண்டில் அசாமில் ஒரு புகைப்படப்பிடிப்பின் போது அனிந்திதா பால்
பிறப்புஅனிந்திதா பால்
குவகாத்தி, அசாம்
தேசியம்இந்தியன்
கல்விகுவகாத்தி, காட்டன் கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் லக்னோவின் பத்கண்டே இசை நிறுவனத்தில் குரலிசையில் விசார்டு படிப்பு
பணிபாடகி, இசையமைப்பாளர் பாடலாசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது
பெற்றோர்அமல் காந்தி பால்
ஷ்யாமலி பால்
வாழ்க்கைத்
துணை
திப்யஜோதி நாத்
உறவினர்கள்மித்ராணி பால் (சகோதரி)
வலைத்தளம்
www.aninditapaul.in

அனிந்திதா பால் (பிறப்பு : 1975) இந்தியாவின் அசாம் மாநிலத் தலைநகர் குவகாத்தியைச் சேர்ந்த பாடகி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அனிந்திதா பால் அஸ்ஸாமின் குவஹாத்தியில் அமல் காந்தி பால் மற்றும் ஷியாமலி பால் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். அவரது தந்தை இந்திய உணவுக் கழகத்தின் ஒப்பந்த மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளில் பணியாற்றினார், இல்லத்தரசியான அவரது தாயார் ஒரு இசை ஆர்வமுள்ளவர் மேலும் கல்லூரி விழாக்களில் பங்கேற்று பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆரம்பகால நிகழ்ச்சிகள்[தொகு]

லக்னோவில் உள்ள பட்கண்டே இசை நிறுவனத்துடன் இணைந்த ஒரு நிறுவனத்திடமிருந்து இந்தியப் பாரம்பரிய இசையில் (குரல்) விஷரத் பட்டம் பெற்றார். இவர் குவகாத்தியில் திவிபென் ராயிடம் பயிற்சி பெற்றார், பின்னர் பண்டிதர் அஜோய் சக்ரபோர்த்தியிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள கொல்கத்தா சென்றார்.

அசாமில் மேடைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய அனிந்திதா பால் விரைவிலேயே குவஹாத்தியில் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின் பஜன் மற்றும் நவீன பாடல்களின் தரப்படுத்தப்பட்ட கலைஞராக இருந்தார். அனிந்திதாவின் இசைப்பயணத்தை தொடரவும் ஊக்குவிப்பதிலும் அவரது தந்தை ஆரம்பத்தில் தயங்கியிருந்தாலும், பின்னர் தனது குரல் வளத்தாலும் அர்ப்பணிப்பாலும் தந்தையை சமாளித்து பாடுவதைத் தொடர்ந்தார்.

திரைப்படம் சாராத இசை[தொகு]

2000 ஆம் ஆண்டில், பால் தனது முதல் அசாமி ஆல்பமான பைலட் டயர் பிராய் பொடுமோர் பாஹி ஓய் (2000) ஐ வெளியிட்டார். பாடல்களை அசாமிய கவிஞர் ஸ்ரீ கமலானந்தா பட்டாச்சார்யா (பாவ்லி கோபி) எழுதி இருந்த தலைப்பு பாடல் தொகுப்பின் மூன்று பாடல்களைப் பாடினார்.

2010 ஆம் ஆண்டில்,அனிந்திதா பால் தனது முதல் தனி இசை ஆல்பமான துமர் பிரசங்ஷாட் மூலம் வெவ்வேறு இசை வகைகளை விரிவுபடுத்தினார், இதன் தலைப்பு மறைந்த ஸ்ரீ ஹிரென் பட்டாச்சார்யாவால் வழங்கப்பட்டது .[1] துமார் பிரசங்ஷாட் கலப்பு இசை வகைகளின் ஆல்பமாகும் - முதன்மையாக நவீன அசாமிய பாடல், இது பாலே, ஆர் & பி மற்றும் பாப்-ராக் ஆகியவற்றைக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாட்டுப்புற உணர்வுகளை மனதில் கொண்டு பாடப்பட்டிருந்தது.

பின்னணி பாடல்[தொகு]

முன்னணி பின்னணி பாடகர்களில் ஒருவராக பல அஸ்ஸாமிய மொழித் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்

அவரது 'பிலட் டைர்பிராய்' என்ற பாடல் மூலம் கவனத்தை ஈர்த்த பிறகு, அனிந்திதா பல அசாமிய இசை-இயக்குனர்களால் பாடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார், இது அவரது திரைப்படத் தொழிலின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. புகழ்பெற்ற அசாமிய இசையமைப்பாளர் ஜுபீன் கார்க், பிரேம் அரு பிரேம் (2002) திரைப்படத்தில் அவரது இசையமைப்பில் பாடுமாறு கேட்டுக் கொண்டார், இந்த ஆக்கப்பூர்வமாக பலனளிக்கும் இருவரின் கூட்டு இன்றளவும் தொடர்கிறது.

அனிந்திதா தனது மென்மையான காதல் பாடல்கள் மற்றும் பாரம்பரியப் பாடல்கள் மூலம் தகது மரியாதை அங்கீகாரம் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொண்டு [2] பல இசை-இயக்குனர்களுக்காக பல படங்களில் பாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கானே கி ஆனே மற்றும் சோங்காட் ஆகியவை படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரைப்படப் பாடல்கள்[தொகு]

ஆண்டு படத்தின் பெயர் பாடல்
2016 கானே கி ஆனே டான்சிங் டுநைட் [3]
2014 ராக் a) ஆயி ஜூன் ஜில்மில் சோந்தியா [4]
b) டப்டப் ஷோர் எண்டார் [5]
c) அகோ எபார் [6]
2012 கச்சே அச்சோ துமி ( பெங்காலி திரைப்படம் ) சொக்கே சொக்கே [7]
2011 ஜெதுகா பாட்டர் டோர் பிபோல் சொகுபனையர்
2010 மோன் நியே ( பெங்காலி திரைப்படம் ) செனா செனா [8]
2006 ஆமி அசோமியா ஹெய் கியோன் அஜி ஹடோடே
2006 ஆதினாயக் சொபுநுர் பகே பகே மேலி டிலு அக்ஷரெ சொய்
2005 சேனா முர் துலியா மிதா இ ரதி [9]
2004 தினபந்தூ (அ) கோர் எஜாக் ஷோபன் ஜென் போரோஷுன் [10]
(ஆ) தியா முக தியா [11]
2003 பிரேம் பார சக்கலு (அ) பிரேம் போரா சொகுலு</br> (ஆ) ஆகாஷ் நில ககோஜோட்
2002 பிரேம் அரு பிரேம் மோரோம் எதானி மோரோம் [12]

இந்தி மற்றும் பிற மொழிகளில் பதிவு செய்யப்பட்ட படைப்புகள்[தொகு]

அனிந்திதாவின் பாடல் திறமைக்கான நற்சான்றிதழ்கள் பரந்த அளவிலான ஊடக தளங்களில் நிறுவப்பட்டுள்ளன.

விருதுகள்[தொகு]

தினபந்து திரைப்படத்தில் கோர் எஜக் சொபுன் ஜென் போரோசன் என்ற பாடலுக்காகவும் ஜெடுகா படோர் டோரே எனற திரைப்படத்தின் பிபோல் சொக்பனிரே என்ற பாடலுக்காகவும் பவுல் இருமுறை தேசிய திரைப்பட விருதுகளுக்காக பரிசீலிக்கப்பட்டிருக்கிறார்.

2004 'கோர் எஜக் சொபுன் ஜென் போரோசன் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான ஜோதிரூபா ஊடக விருது (தீனபந்து)

கோர் எஜக் சொபுன் ஜென் போரோசன் பாடலுக்காக (தீனபந்து) சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான 2005 பிராக் சினி விருது [13]

ஜெட்டுகா படோர் டோர் படத்தின் பிபோல் சொக்பனிரெ' என்ற பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான 2010 ப்ராக் சினி விருது

ராக் (திரைப்படம்) சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான 2014 ப்ராக் சினி விருது [14][15][16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Hiruda and his Musical Journey". NELIT Review. Siba K Gogoi. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
 2. "Interview of Anindita Paul By Kumar Bhaskarjyoti". Kumar Bhaskarjyoti. Kumar Bhaskarjyoti. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
 3. "'DANCING TONIGHT ' Full AUDIO song - Gaane Ki Aane - Zubeen Garg & Parineeta - Anindita Paul". Youtube. Gaane Ki Aane. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
 4. "Ae Jon Jilmil Xondhia". Youtube. Rajni Basumatary.
 5. "Tup Tup Xore Andhar". Youtube. Rajni Basumatary. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
 6. "Akou Ebar". Youtube. Rajni Basumatary. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
 7. "Swastika & Jishu - Zubeen Garg - Chokhe Chokhe - Kachhe Achho Tumi". Youtube. INRECO Bangla Film Songs. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
 8. "Chena Chena - 2010 - Mon Niye Bengali Movie Song Zubeen Garg, Anindita". Youtube. Saregama Bengali. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
 9. "MITHA EAI RAATI by Anindita Paul Film - SENAI MUR DHULIA". Youtube. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
 10. "Kor Ejak Dinabandhoo (2004) Best of Assamese Cinema". Youtube. Assamese Film. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
 11. "Zubeen Garg & Anindita Paul- Diya muk Diya". Youtube. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
 12. "ZUBEEN AND ANINDITA PAUL song SIORI SIORI". Youtube. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
 13. "Actors play phoenix at awards function - Gogoi appeals for donation at Prag ceremony to rebuild B. Borooah". The Telegraph. The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
 14. "List of Award Winners : Prag Cine Award 2014". Magical Assam. Magical Assam Staff. Archived from the original on 5 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. "Nominations of Prag Cine Award 2014". Creativica. Abhijit Roy. Archived from the original on 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
 16. "The Assam Tribune Online". Nominations for Prag Cine Award, 2013. Staff Reporter. Archived from the original on 15 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
 17. "Avinash gets nod for best music director". Ragasur. Ragasur. Archived from the original on 5 August 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிந்திதா_பால்&oldid=3927071" இலிருந்து மீள்விக்கப்பட்டது