அனிதா - இளம் மனைவி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா - இளம் மனைவி
அனிதா - இளம் மனைவி
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2010
ISBN978-81-8493-450-2

அனிதா - இளம் மனைவி, சுஜாதாவால் எழுதப்பட்டு 1971-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு[தொகு]

ஒரு பெரும் பணக்காரரின் இரண்டாம் மனைவியைச் சுற்றி நிகழும் மர்ம சம்பவங்கள், அந்த பணக்காரரின் மகளுக்கும் இரண்டாம் மனைவிக்கும் வரும் பிரச்சினைகள், இவற்றால் வக்கீல் கணேஷை அணுகுகின்றனர். அந்த மர்மங்களின் முடிச்சை கணேஷ் விடுவித்தாரா என்று செல்லும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • அனிதா
  • இன்ஸ்பெக்டர் ராஜேஷ்
  • ஆர்.கே.ஷர்மா
  • பாஸ்கர்
  • கோவிந்த்
  • மோனிக்கா ஷர்மா மற்றும் பலர்.

திரைப்படமாக[தொகு]

சுஜாதாவின் இப்புதினம் இது எப்படி இருக்கு என்ற பெயரில் 1978 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆர். பட்டாபிராமன் இயக்க, இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]