உள்ளடக்கத்துக்குச் செல்

அனிதா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா யாதவ்
தொகுதிசல்காசு (2000 & 2005); அடேலி (2009)
சட்டமன்ற உறுப்பினர்-2014
பதவியில்
2000–பதவியில்
அமைச்சர், அரியானா அரசு
பதவியில்
2009–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1964 (1964-04-20) (அகவை 61)
ரேவாரி, அரியானா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஓம்கார் யாதவ்
பிள்ளைகள்1 மகன்; 1 மகள்
கல்விஇளங்கலை, பட்டயம்-மருந்தாளுநர் (கருநாடகம்)

அனிதா யாதவ் (Anita Yadav)(பிறப்பு ஏப்ரல் 20,1964) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அயானா சட்டமன்ற உறுப்பினராகவும், அரியானாவின் அடேலி (மகேந்திரகர் சட்டப்பேரவை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சராகவும் உள்ளார்.[1] 1995-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தின் ரேவாரியில் மாவட்டத் தலைவராக அரசியலில் நுழைந்த இவர், 2000-ஆம் ஆண்டில் சல்காசு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 2000ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக மக்களுக்குச் சேவை செய்து வருகிறார்.[2][1]

அனிதா யாதவ் 2009-ஆம் ஆண்டில் அடேலி தொகுதியில் போட்டியிட்டு, தன்னுடைய போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டி இருந்தபோதிலும் அகிர் இனக்குழுக்கள் மிகுந்த பகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்[3] இவர் தலைமை நாடாளுமன்றத் செயலாளராகவும் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

அரியானா ரேவாரி மாவட்டத்தில் கன்வாலி மாவட்டத்தில் 1964 ஏப்ரல் 20 அன்று உம்ராவ் சிங்கிற்கு யாதவிற்கு மகளாகப் பிறந்தார், அனிதா. அனிதா ரேவாரியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை கலை பட்டம் பெற்றார். கருநாடகாவில் இரண்டாண்டு மருந்தாளுநர் பட்டயப்படிப்பினை முடித்தார்.[2][4]

அரசியல்

[தொகு]

அனிதா பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:[1][2]

  • உறுப்பினர், அகில இந்தியக் காங்கிரசு குழு 2000-ஆம் ஆண்டு முதல்
  • துணைத் தலைவர், மாவட்ட குழு, ரேவாரி
  • மாவட்டம். தலைவர், காங்கிரசு (1995-2000
  • பொதுச் செயலாளர், அகில இந்திய மகளிர் காங்கிரசு, 1997-2000
  • தலைவர், அரியானா மகளிர் காங்கிரசு, 2000-2004
  • சார்க் மாநாடு-அகில இந்தியக் காங்கிரசு குழு மாநாடுகள் (ஆதிவேசன்) 1995 முதல் 2005 வரை
  • மாநில அமைச்சர், தலைமை நாடாளுமன்றச் செயலாளர்

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அனிதா ஓம்கார் யாதவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "MLA Details Ateli". haryanaassembly.gov.in. Archived from the original on 8 March 2019. Retrieved 2017-06-16.
  2. 2.0 2.1 2.2 "MLA Details Salhawas". haryanaassembly.gov.in. Archived from the original on 8 March 2019. Retrieved 2017-06-16.
  3. "Rao Dan Singh, Anita Yadav score hat-trick in Ahirwal belt Our Correspondent". http://www.tribuneindia.com/2009/20091027/harplus.htm#2. 
  4. "Candidate Affidavit". affidavitarchive.nic.in. Retrieved 2017-06-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_யாதவ்&oldid=4233357" இலிருந்து மீள்விக்கப்பட்டது