அனிதா தம்பி

அனிதா தம்பி (Anitha Thampi) ஒரு மலையாள மொழி கவிஞராவார்.இவர் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஒரு மாநிலமான கேரளாவிலுள்ள ஆலப்புழா நகரத்தைச் சேர்ந்த இவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.[1] விமர்சன ரீதியாக பாராட்டுகளுக்கு உட்பட்ட இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு புராணக்கதைகள் மற்றும் பத்திரிகைகளில் தோன்றின.[1][2] மொகிட்டோ பாடல் என்ற அனிதாவின் கவிதை கேரளாவின் தேசிய கீதம் என்று வரலாற்றாசிரியர் யே.தேவிகா விவரிக்கிறார்.[3].
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மத்திய கேரளாவின் கிராமப்புறத்தில் ஒரு முற்போக்கான குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு அனிதா தம்பி பிறந்தார். குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரிகளில் மூத்தவராக இவர் வளர்ந்தார். பசுமையான தனது கிராமப்புறம் விரிவடைவதற்காக மெல்ல மெல்ல ஒரு நெரிசலான நகரமாக மாறுவதைப் பார்த்து கொண்டே வளர்ந்ததாக அனிதா தம்பி குறிப்பிட்டுள்ளார். இக்காட்சி அனிதாவின் கவிதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[2] தொழில்முறையாக அனிதா ஒரு வேதியியல் பொறியாளராக உருவானார் என்றாலும் கவிதையென்ற இலக்கிய உலகில்தான் அனிதா ஆராய்ந்து கொண்டிருந்தார்.[4] அனிதா தம்பி தனது முதல் புத்தகமான முட்டமட்டிக்கும்போல் (முன்புற முற்றத்தை துடைக்கும் போது) என்ற கவிதை நூலை 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[5] மலையாள மொழியில் வெளியாகும் இரண்டாவது பெரிய நாளிதழான மாத்ருபூமி இந்த புத்தகத்திற்கு "ஆண்டின் சிறந்த கவிதை புத்தகம்" என்ற விருதை வழங்கியது.[1][2] அனிதாவின் கவிதைள் பின் நவீனத்துவ அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் அந்த கட்டுரை விவரித்தது.[1] 2007 ஆம் ஆண்டில் ஆத்திதிரேலியக் கவிஞர் லெசு முர்ரேயின் படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்து, கவிதக்கல் என்ற ஒரு தொகுபு நூலாகத் தொகுத்தார். '[4] 2010 ஆம் ஆண்டு அழகில்லாதவயெல்லாம்’ என்ற தன்னுடைய இரண்டாவது நூலை வெளியிட்டார். 2016 ஆம் ஆண்டு மூன்றாவத்கு நூலான ஆலப்புழா வெள்ளம் என்ற நூலை வெளியிட்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Anitha Thampi". Mathrubhumi. 21 January 2018. Retrieved 2020-11-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 2.0 2.1 2.2 "Anitha Thampi". Poets translating Poets. Goethe-Institut. Retrieved 2020-11-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Bhargava, Shashank (28 October 2017). "What is untranslatable? Ten translators from Indian languages list their candidates". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 4.0 4.1 "Bringing great poetry to India - Australian poet Les Murray's Malyalam translations' launch in Kochi on 21 November 2007". Australian High Commission at New Delhi. Department of Foreign Affairs and Trade (Australia). Retrieved 2020-11-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 5.0 5.1 "Anitha Thampi". Literature Across Frontiers. Retrieved 2020-11-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link)