உள்ளடக்கத்துக்குச் செல்

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: 1956) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருப்பூரில் வசித்து வரும் இவர் 10 நூல்கள் வரை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதிய “தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அறிவே ஆயுதம் தன்னம்ப்பிக்கை பேரவை அமைப்பின் நிறுவனரான இவர் திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.[1]

வ.உ.சிதம்பரனார், காமராஜர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை போன்ற தமிழக தலைவர்களின் வாழ்க்கை வரலாறை ஆய்வு செய்து, நுால்களாக தந்திருக்கிறார். அறிவே ஆயுதம், காந்தி கணக்கு, மும்பை மாநகர தமிழர்களின் வரலாறு' ஆகியவை இவர் எழுதிய சில நூல்களாகும். [2]

மேற்கோள்கள்

[தொகு]