அனிதா காபியின் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அனிதா காபி
பிறப்பு நவம்பர் 2,1959
சிட்னி, நியூ சவுத் வேல்சு
நாடு:ஆசுதிரேலியா
இறப்பு ஃபிப்ரவரி 2, 1986
ப்ராஷ்பெக்ட், நியூ சவுத் வேல்சு
பணி செவிலி
தேசியம் ஆத்திரேலியர்

அனிதா லொரைன் காபி (2 நவம்பர் 1959 - 2 பெப்ரவரி 1986) என்பவர் 26 வயதான ஆசுதிரேலிய செவிலிப் பெண் மற்றும் அழகு போட்டியில் வென்றவர் ஆவார். ஃபிப்ரவரி 2, 1986 அன்று இரவு, பணி முடிந்து வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அனிதா காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், நியூ சவுத் வேல்சு அருகே ப்ராசுபெக்ட் பகுதியின் ஒரு பண்ணையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பின் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் குற்றம் ஜூன் 10, 1987ல் நிரூபிக்கப்பட்டது. ஜூன் 16, 1987ல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_காபியின்_கொலை&oldid=2479370" இருந்து மீள்விக்கப்பட்டது