அனிதா கமல்
அனிதா கமல் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேசம் | |
| பதவியில் மார்ச்சு 2017 – மார்ச்சு 2022 | |
| முன்னையவர் | பீம் பிரசாத் சோன்கர் |
| தொகுதி | ஆலப்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 மார்ச்சு 1986 காத்தாம்பூர், அம்பேத்கர் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | லக்னோ மாவட்டம் |
| கல்வி | Master of Arts |
| முன்னாள் மாணவர் | அவத் பல்கலைக்கழகம் |
| பணி | சட்டமன்ற உறுப்பினர் |
| தொழில் |
|
அனிதா கமல் (Aneeta Kamal) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசச் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் 17ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள அலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தொகுதியை பிரதிநிதித்தினார். அனிதா பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அனிதா கமல் 23 மார்ச் 1986 அன்று உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டாமிபூர் கிராமத்தில் தந்தை ராம் பரித்துக்கு மகளாகப் பிறந்தார். 2006-ஆம் ஆண்டில், இவர் அவதேசு குமாரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் பட்டியலிடப்பட்ட சாதி (சாமர்) சமூகத்தைச் சேர்ந்தவர். 2010-ஆம் ஆண்டில், இவர் பாபா பாருவா தாசு மகாவித்யாலயா மருயா ஆசிரமத்தில் (அவத் பல்கலைக்கழகம்) பயின்றார். அனிதா முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]அனிதா கமல் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். முதல் முயற்சியிலேயே சட்டப்பேரவையில் வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேசத்தின் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் (2017), சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சங்கீதாவை 12,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| # | முதல் | வரை | நிலைப்பாடு | கருத்துக்கள் |
|---|---|---|---|---|
| 01 | மார்ச் 2017 | 2022 | உறுப்பினர், உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்றம் | [5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "धैर्य रखें, हर समस्या दूर करूंगी: अनीता कमल". www.livehindustan.com. Retrieved 19 November 2018.
- ↑ "Member Profile". Official website of Legislative Assembly of Uttar Pradesh. Archived from the original on 17 February 2023. Retrieved 30 May 2020.
- ↑ "सदस्य उत्तर प्रदेश विधान सभा". uplegisassembly.gov.in. Retrieved 30 May 2020.
- ↑ "Alapur Election Results 2017". elections.in. Retrieved 19 November 2018.
- ↑ "Alapur Assembly Election 2017 Candidate List & Winner". India.com (in ஆங்கிலம்). Retrieved 19 November 2018.