உள்ளடக்கத்துக்குச் செல்

அனிசு தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிசு தேவ்
பிறப்பு(1951-10-22)22 அக்டோபர் 1951
கொல்கத்தா, இந்தியா
இறப்பு28 ஏப்ரல் 2021(2021-04-28) (அகவை 69)
கொல்கத்தா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
B.Tech., M.Tech. and Ph.D.(tech)

அனிசு தேவ் (Anish Deb) (22 அக்டோபர் 1951[1][2] – 28 ஏப்ரல் 2021) ஓர் இந்திய வங்காளமொழி எழுத்தாளரும் கல்வியாளரும் ஆவார். அறிவியல் புனைவு மற்றும் திகில் வகையிலான தனது படைப்புகளுக்காக இவர் பெரிதும் அறியப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் பெற்ற வித்யாசாகர் விருது உட்படப் பல இலக்கிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.[3][4]


ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அனிசு தேவ் 1951-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.[5] இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் துறையிலிருந்து, பயன்பாட்டு இயற்பியலில் தனது பொறியியல் துறையில், இளங்கலை தொழில்நுட்பம் (1974), முதுகலை தொழில்நுட்பம் (1976) மற்றும் முனைவர் (தொழில்நுட்பம்) பட்டங்களைப் பெற்றார். இப்படிப்புகளின் போது இவர் 1 வெள்ளிப் பதக்கத்தையும், 2 பல்கலைக்கழகத் தங்கப் பதக்கங்களையும் வென்றார்.[6]

பணிவாழ்க்கை

[தொகு]

அனிசு தேவ் தனது எழுத்துப்பணியை 1968-ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் பிரபலமான புனைகதைகள், நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகளின் பல தொகுப்புகளையும் தொகுத்து வெளியிட்டார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில: காசர் ஷீஷ் நெய், சேபர் சோக், தீர்பித்தோ, தீஷ் காண்டா ஷட் மினிட், ஹேட் கலோமே கம்ப்யூட்டர், பிக்யனர் தாஷ்டிகாண்டோ மற்றும் ஜிபோன் ஜோகோன் பூரியே ஜே ஆகியவை ஆகும்.[7][8]

மறைவு

[தொகு]

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தேவ் 2021-ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 அன்று கொல்கத்தாவில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. IETE Technical Review (in ஆங்கிலம்). Institution of Electronics and Telecommunication Engineers. 1990.
  2. admin. "Kishor Kalpobigyan Samagra by Anish Deb" (in ஆங்கிலம்). Bangla eBooks pdf. Retrieved 2023-04-12.
  3. "বিদ্যাসাগর পুরস্কার পাচ্ছেন অনীশ দেব" (in bn). EI Samay. https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/this-year-vidyasagar-award-is-being-given-to-anish-dev/articleshow/69451983.cms.
  4. "Anish Deb: করোনায় প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক অনীশ দেব". Aaj Tak বাংলা (in Bengali). Retrieved 2021-04-28.
  5. "Popular Bengali writer Anish Dev dies due to Covid-19". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-04-28. Retrieved 2021-04-28.
  6. "Dr. Anish Deb". Engineering. Archived from the original on 26 July 2019. Retrieved 28 April 2021.
  7. 1 2 "রহস্য রোমাঞ্চের জগতে ভাটা! কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব" (in bn). TV9Bangla. 28 April 2021. https://tv9bangla.com/kolkata/anish-deb-passes-away-in-covid19-355510.html.
  8. "anish-deb". readbengalibooks.com. Retrieved 2021-04-28.

வெளிப்புற இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிசு_தேவ்&oldid=4508756" இலிருந்து மீள்விக்கப்பட்டது