அனிசா சையது
![]() 2010இல் புது தில்லியில் நடந்த 21வது நாடுகளின் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், 25 மீட்டர் துப்பாக்கி சுடும் பெண்கள் (இரட்டையர்) பிரிவில் தங்கம் வென்ற அனிசா சையது. | |||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 22 செப்டம்பர் 1980 வய், மகாராட்டிரம், இந்தியா[1] | ||||||||||||||||||||||||||||
உயரம் | 157 செ.மீ.[1] | ||||||||||||||||||||||||||||
எடை | 90 கி.[1] | ||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | முபாரக் உசேன்[1] | ||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | ||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 25 மீட்டர் துப்பாக்கி | ||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அனிசா சையது (Anisa Sayyed) இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.[2] 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 25 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3] 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலமும், அதே ஆண்டில் கிளாசுகோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளியும் வென்றார்.[4] 2017 ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 25 மீ காற்றுத் துப்பாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் ஒரு புதிய தேசிய சாதனையை படைத்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]புனேவின் சதாரா மாவட்டத்தில் உள்ள கட்கியைச் சேர்ந்த அனிசா, அப்துல் அமீது சையத்தின் மகளாகப் பிறந்தார். நான்கு உடன்பிறப்புகளில் இவர் இளையவர் ஆவார்.[5] முன்னதாக கழக அளவிலான கால்பந்து வீரராக இருந்த இவரது தந்தை,டெல்கோவில் எழுத்தராக பணிபுரிந்தார்.[6] கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி பெற்றபோது அனிசா துப்பாக்கிச் சூட்டில் ஆர்வம் காட்டினார். இவரது பள்ளி வாழ்க்கையில் சிறந்த தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் வீரர் என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.[7]
தொழில்
[தொகு]அனிசா லேடி அவாபாய் பள்ளியில் ஆரம்ப ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[6] பின்னர் மகாராட்டிராவின் விலே பார்லே இரயில் நிலையத்தில் பரபரப்பான மும்பை-புனே இரயில் பாதையில் பயணச்சீட்டு - சேகரிப்பவராக இந்திய இரயில்வேயில் பணியாற்றத் தொடங்கினார்.[8] தனது சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய பலமுறை மறுக்கப்பட்டதால் இவர் தனது வேலையை துறந்து வெளியேறினார்.[8]
2002 ஆம் ஆண்டில் கனி சேக்கு மற்றும் பி.வி. இனாம்தர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் அனிசாவின் துப்பாக்கி சுடும் வாழ்க்கை தொடங்கியது.[9] 25 மீட்டர் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் ரகி சர்னோபாத்துடன் இணை சேர்ந்தபோது அனிசா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.[10] 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் 26 ஆம் தேதியன்று கிளாசுகோ அருகிலுள்ள பாரி புடன் துப்பாக்கி சுடுதல் மையத்தில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் 25 மீட்டர் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.[11] தேசிய பயிற்சியாளர் சன்னி தாமசு 2010 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்பு இவருக்கு சில சிறப்பு நுட்பங்களைக் கற்பித்தார்.[7]
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அனிசா 776.5 மதிப்பெண்ணுடன் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார். 2006 ஆம் ஆண்டில் தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.[12] 2014 ஆம் ஆண்டில், கிளாசுகோவில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அனிசாவை ஆங்கிலியன் பதக்க வேட்டை நிறுவனம் ஆதரித்தது.[13] 2017 ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் போட்டியில் 25 மீ கைத்துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஒரு புதிய தேசிய சாதனையை உருவாக்கினார்.
சர்ச்சை
[தொகு]இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற பிறகு இவருக்கு ஒரு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசு அவரை தனது விளையாட்டிற்கே திரும்புமாறு கேட்டுக்கொண்டது..[14]
நவம்பர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் பணிபுரிந்த மாநில விளையாட்டுத் துறையில் மூத்த அதிகாரிகள் மீது துன்புறுத்தல் புகார் அளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அடுத்தடுத்த விளையாட்டுகளுக்கு அதிகாரத்தால் முறையாக அனுமதிக்கப்படவில்லை என்றும் இவர் கூறினார். அரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இயக்குநரிடம் உரையாற்றிய இவர், வேலையுடன் தனது விளையாட்டைத் தொடர தேவையான வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த மாநில அரசுடன் தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தினார்.[15]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அனிசா முபாரக் கான் என்பவரை அனிசா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டில் ஒரு மகள் பிறந்தார். இந்த இணை த்ற்போது அரியானாவின் பரிதாபாத்து மாவட்டத்தில் வசித்து வருகிறது..[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Anisa Sayyed பரணிடப்பட்டது 25 சூன் 2019 at the வந்தவழி இயந்திரம். glasgow2014.com
- ↑ Sayyed, Anisa (7 October 2010). "Double delight for Pune shooter Anisa Sayyed". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/india-news/Double-delight-for-Pune-shooter-Anisa-Sayyed/articleshow/6703635.cms. பார்த்த நாள்: 19 September 2013.
- ↑ "Pistol shooter Rahi Sarnobat wins gold, Anisa Sayyed silver". IANS. news.biharprabha.com. 26 July 2014. http://news.biharprabha.com/2014/07/pistol-shooter-rahi-sarnobat-wins-gold-anisa-sayyed-silver/. பார்த்த நாள்: 26 July 2014.
- ↑ "Haryana sports department takes aim at India shooter Anisa Sayyed" (in en). hindustantimes.com/. 23 November 2017. https://www.hindustantimes.com/other-sports/haryana-sports-department-takes-aim-at-india-shooter-anisa-sayyed/story-bsVtNGAyT8If6O5WPiUVTN.html.
- ↑ "teachers class act" (in en-US). The Indian Express. 7 October 2010. http://indianexpress.com/article/news-archive/print/teachers-class-act/.
- ↑ 6.0 6.1 "Anisa climbs her way up to glory from a very humble beginning". sunday-guardian.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 1 December 2017. Retrieved 13 May 2017.
- ↑ 7.0 7.1 "It's all the more sweet after overcoming hardships: Anisa". NDTV.com. https://www.ndtv.com/commonwealth-games/its-all-the-more-sweet-after-overcoming-hardships-anisa-434732.
- ↑ 8.0 8.1 8.2 TwoCircles.net (6 October 2010). "Anisa Sayyed: From ticket-checker to shooting champion | TwoCircles.net". twocircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-05-13.
- ↑ "Double delight for Pune shooter Anisa Sayyed - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/india-news/Double-delight-for-Pune-shooter-Anisa-Sayyed/articleshow/6703635.cms.
- ↑ "CWG 2014: Pistol shooter Rahi Sarnobat wins gold, Anisa Sayyed silver" (in en). hindustantimes.com/. 26 July 2014. http://www.hindustantimes.com/other/cwg-2014-pistol-shooter-rahi-sarnobat-wins-gold-anisa-sayyed-silver/story-KoZv6w11gqf0yvD4J6AvUO.html;jsessionid=B6AD76F63AB1446C9ADF6A7D71A720F9.
- ↑ "Commonwealth Games 2014: Pistol Shooting - Rahi Sarnobat wins gold, Anisa Sayyed silver". 26 July 2014. https://www.sportskeeda.com/shooting/commonwealth-games-2014-rahi-sarnobat-wins-gold-anisa-sayyed-silver-shooting.
- ↑ NDTVSports.com. "I am Still Waiting for That Promised Job: Commonwealth Games Silver Medallist Anisa Sayyed – NDTV Sports". NDTVSports.com. https://sports.ndtv.com/commonwealth-games-2014/i-am-still-waiting-for-that-promised-job-commonwealth-games-silver-medallist-anisa-sayyed-1514891.
- ↑ Marar, Nandakumar. "Hat-trick for Anisa Sayyed" (in en). The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/hattrick-for-anisa-sayyed/article2648024.ece.
- ↑ "CWG gold medal winner Anisa Sayyed still waiting for promised job" (in en). mid-day. 5 August 2014. https://www.mid-day.com/articles/cwg-gold-medal-winner-anisa-sayyed-still-waiting-for-promised-job/15506154.
- ↑ Rajput, Pushpendra Singh (25 November 2017). "Commonwealth Games Star Anisa Sayyed alleged harassment by senior officials - Haryana ABTAK" (in en-US). Haryana ABTAK இம் மூலத்தில் இருந்து 4 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180904154151/http://haryanaabtak.com/featured/commonwealth-games-star-anisa-sayyed-alleged-harassment-senior-officials/.
வெளி இணைப்புகள்
[தொகு]- அனிசா சையது பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பில்