உள்ளடக்கத்துக்குச் செல்

அனிசா அம்புரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிசா அம்புரோசு
பிறப்புவிசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2013–2019
வாழ்க்கைத்
துணை
குணநாத் ஜக்கா (தி. 2019)
பிள்ளைகள்1

அனிசா அம்புரோசு (Anisha Ambrose) என்பவர் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013-ஆம் ஆண்டில், இவர் அலைசு ஜானகி தெலுங்கு மொழித் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[1]

இளமை

[தொகு]

அனிசாவின் பெற்றோர் ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். இவர் ஒடிசாவில் வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் ஆந்திராவிலும் ஒடிசாவிலும் பல பள்ளிகளை நடத்தி வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் உள்ள தூய செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். மேலும் கீதம் பன்னாட்டு வணிகப் பள்ளியில் நிதித்துறையில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பினை முடித்தார்.[2]

இவர் முகநூலில் ஒரு நண்பரின் புகைப்படப் பக்கத்திற்கு வடிவழகி பணியினைச் செய்தார். மேலும் இவருடைய படங்களைத் தயாரிப்பாளர் நீலிமா திருமலசெட்டி கவனித்தார். இதன் மூலம் இவரது திரைப்பட வாழ்க்கை தொடங்கியது.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அம்புரோசு மே 2019-இல் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் குணநாத் ஜக்காவை மணந்தார். பின்னர் நடிப்புத் தொழிலிருந்து விலகினார்.[5][6] இந்தத் தம்பதியருக்கு 2020-இல் ஒரு குழந்தை பிறந்தது.

டார்வினைச் சேர்ந்த உள்ளூர் பாடகர் பால் டேவி, அனிசா அம்ப்ரோசின் உறவினர் ஆவார்.

திரைப்படவியல்

[தொகு]

.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2013 அலைசு ஜானகி சைத்ரா தெலுங்கு
2013 பவன் கல்யாண் பிரேமலோ படாது சுவேதா குறும்படம்
2015 கோபாலா கோபாலா பத்திரிகையாளர் சிறு தோற்றம்
2015 எ செகண்டு கேண்டு லவ்வர் அஞ்சலி கன்னடம்
2016 ரன் அமுல்யா தெலுங்கு
2016 கார்வா அம்ருதா கன்னடம் பரிந்துரைக்கப்பட்டது: ஐ.ஐ.எப்.ஏ. சிறந்த நடிகை
2016 மனமந்தா அய்ரா தெலுங்கு
2017 பேஷன் டிசைனர் சன் ஆப் லேடீஸ் டெய்லர் மகாலட்சுமி
2017 வுன்னாதி ஓகே ஜிந்தகி மகாலட்சுமி சிறு தோற்றம்
2017 ஒக்காடு மிகிலாடு சுவர்ணா
2018 ஈ நாகராணிக்கு ஏமைந்தி செர்லி
2018 வஞ்சகர் உலகம் சம்யுக்தா தமிழ்
2019 செவன் ஜென்னி தெலுங்கு
தமிழ்
2024 விசுவம் மீரா தெலுங்கு சிறு தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ King, Vincent (8 July 2013). "From FB to films". Deccan Chronicle. Archived from the original on 12 July 2013. Retrieved 10 September 2014.
  2. ↑ Rajamani, Radhika (24 July 2013). "Anisha Ambrose: I never thought of being an actor". rediff.com. Retrieved 10 September 2014.
  3. ↑ "Pride - a quality aspiring actors shouldn't possess: Anisha Ambrose". Zee News. 8 July 2013. Retrieved 10 September 2014.
  4. ↑ "Pride - a quality aspiring actors shouldn't possess: Anisha Ambrose". Yahoo! News. 8 July 2013. Archived from the original on 31 December 2013. Retrieved 28 December 2013.
  5. ↑ AuthorTelanganaToday. "Actor Anisha Ambrose pregnant with first child". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 21 August 2020.
  6. ↑ "Actress Anisha Ambrose blessed with a baby boy". Telugu Cinema (in அமெரிக்க ஆங்கிலம்). 14 August 2020. Retrieved 21 August 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிசா_அம்புரோசு&oldid=4676246" இலிருந்து மீள்விக்கப்பட்டது