அனாகிதா ரதேப்சாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனாகிதா ரதேப்சாத்
3 பிப்ரவரி 1980இல் ரதேப்சாத்
ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 நவம்பர்r 1985
குடியரசுத் தலைவர் பாப்ராக் கர்மல்
ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்
பதவியில்
1979–1986
ஆப்கானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1965–1969
யுகோசுலாவியாவின் ஆப்கன் தூதர்
பதவியில்
சூலை 1978 – 1980
தனிநபர் தகவல்
பிறப்பு (1931-11-01)1 நவம்பர் 1931
குல்தாரா, ஆப்கானித்தான்
இறப்பு 7 செப்டம்பர் 2014(2014-09-07) (அகவை 82)
ஜெர்மனி
வாழ்க்கை துணைவர்(கள்) கெரமுதீன் கக்கர்
பிள்ளைகள் 3

அனாகிதா ரதேப்சாத் (Anahita Ratebzad) (நவம்பர் 1931-7 செப்டம்பர் 2014) ஆப்கானித்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், மார்க்சிசிய-லெனினிய அரசியல்வாதியும், ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், பாப்ராக் கர்மல் தலைமையில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்பின் உறுப்பினருமாவார்.[1] ஆப்கானித்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்களில் ஒருவரான ரதேப்சாத் 1980 முதல் 1986 வரை அதன் துணைத் தலைவராக இருந்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

அனாகிதா ரதேப்சாத், ஆப்கானின் காபுல் மாகாணத்திலுள்ள குல்தாரா என்ற இடத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசுத் தலைவராக 1919 முதல் 1929 வரை இருந்த அமானுல்லாகானின் சீர்திருத்தங்களை ஆதரித்தவர். இது 1929இல் முகமது நதிர் கானின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக ஈரானுக்கு கட்டாயமாக நாடு கடத்தலுக்கு வழிவகுத்தது. ரதேப்சாத்தும் இவரது சகோதரரும் மோசமான சூழ்நிலையில் தந்தை இல்லாமல் வளர்ந்தனர். வெளிநாட்டில் படித்த ஆப்கான் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் கெராமுதீன் கக்கரை தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். காபூலில் உள்ள பிரான்கோ-ஆப்கானித்தான் பள்ளிகளை உள்ளடக்கிய மையத்தில் சேர்ந்தார். 1950-1954 வரை மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் செவிலியர் பள்ளியில் படித்து பட்டம் பெற்றார். காபூல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி பெண்களை மருத்துவத்தில் சேர அனுமதித்த முதல் வருடத்தில் இவர் சேர்ந்து 1962இல் பட்டம் பெற்றார்.

இவருடைய அரசியல் ஈடுபாடு இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையில் ஒரு பிரிவுக்கு வழிவகுத்தது. இவர் மன்னர் முகமது சாகிர் ஷாவுக்கு விசுவாசமாக இருந்ததால் இவரது அரசியல் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை. ரதேப்சாத் 1973இல் கணவரின் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவில்லை என்றாலும், அவர்கள் தனித்தனியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் என மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவரது மகள் மட்டுமே இவரது அரசியல் வழியைப் பின்பற்றி ஆப்கானித்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார். இவருடைய மகன்கள் இவருடிய அரசியல் நடவடிக்கைகளையும், முடிவுகளையும் விமர்சித்தனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரதேப்சாத் 1950களின் பிற்பகுதியிலும், 60களிலும் பெரும்பாலான பொது மற்றும் வெளிப்படையான சமூக, அரசியல் ஆப்கன்-பெண் ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார். 1957இல் இலங்கையில் நடந்த ஆசிய மகளிர் மாநாட்டில் சர்வதேச மேடையில் ஆப்கானித்தான் இராச்சியத்தை பிரதிநிதித்திய முதல் ஆப்கன்-பெண்கள் குழுவில் ஒருவராகவும் இருந்தார்.

தாவுத் கான் பிரதமராக இருந்த காலத்தில் முக்காடு பெண்களின் விருப்பமானது[3] என்பதால், இவர் 1957ஆம் ஆண்டில் காபுல் அலியாபாத் மருத்துவமனைக்கு பெண் செவிலியர்களை ஆண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அழைத்துச் சென்றார். இது ஆப்கானித்தான் நகரின் பணி நோக்கத்திற்காக பெண்களின் முகங்களை வெளிக்கொணர்ந்தது. இருப்பினும், இந்த நிகழ்வுகள் ஆப்கன் சமூகத்தின் பழமைவாத வட்டங்களில் அவதூறுக்கு வழிவகுத்தது.

ஆப்கான் பெண்களின் ஜனநாயக அமைப்பு[தொகு]

இவர், 1964இல் ஆப்கான் பெண்களின் ஜனநாயக அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை.[4] இதற்கு வெளிநாட்டு நிதியுதவியோ அல்லது ஆதரவவோ இல்லை. அமைப்பின் உறுப்பினர்களில் அறிவார்ந்த பெண்கள் தங்கள் சொந்த முயற்சியில் பெண்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும் வேலை செய்யவும் முன்வந்தனர்.[4] இருப்பினும், 1978 சௌர் புரட்சிக்குப் பிறகு இந்த அமைப்பு அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் வந்தது. 1980இல் இந்த அமைப்பின் பொதுக்குழுவில் அதன் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், ஆப்கானித்தானில் அனைத்துலக பெண்கள் நாள் முதல் கொண்டாட்டத்தை முன்னிட்டு காபூலில் 8 மார்ச் 1965 அன்று மற்ற உறுப்பினர்களுடன்சேர்ந்து ஒரு எதிர்ப்பு அணிவகுப்பை ஏற்பாடு செய்தார்.[5]

இறப்பு[தொகு]

1986க்கு பிறகு இவர் மே 1992 வரை ஆப்கானித்தானில் இருந்தார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் முஜாஹிதீன் சண்டையிலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1995இல் இவர் பல்கேரியாவின் சோபியாவுக்குச் சென்றார். ஒரு வருடம் கழித்து அரசியல் தஞ்சம் கோரி ஜெர்மனியின் லோனனில் குடியேறினார். தனது 82 வயதில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். அவளது உடல் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு காபூலின் ஷோஹதா-இ-சஅலேஹின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாகிதா_ரதேப்சாத்&oldid=3708102" இருந்து மீள்விக்கப்பட்டது