அனர்கலி ஆகர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனர்கலி ஆகர்சா
பிறப்புஅனர்கலி ஜனினா ஜயதிலக்க ஆகர்சா
12 சூலை 1987 (1987-07-12) (அகவை 36)
கொழும்பு, இலங்கை
பணிநடிகை, மாடல் அழகி அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்சமயம் வரை
வாழ்க்கைத்
துணை
டிசான் ஜயசின்ஹ
விருதுகள்சரசவிய மிக பிரபலமான நடிகை (2004), ஜனாதிபதி விருது அஞ்சலிக்கா (2005) தெரண லக்ஸ் பட விருது மிக பிரபலமான நடிகை (2012) & இலங்கை அழகி (2004)
வலைத்தளம்
www.anarkalli.com

அனர்கலி ஆகர்சா (Anarkali Akarsha, சிங்களம்: අනර්කලී ආකර්ෂා; பிறப்பு: 12 சூலை 1987) இலங்கையைச் சேர்ந்த நடிகை, ஒப்பனை அழகி, பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி ஆவார்.[1] 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அழகி போட்டியில் மகுடம் சூடினார். அதே ஆண்டில் உலக அழகி அணிவகுப்பில் இலங்கை அழகியாக போட்டியிட்டார். இவர் நிறுவனத் தூதராகவும், நிதி திரட்டுபவராகவும் பணி புரிந்துள்ளார்.[2] கொழும்பு சர்வதேச பாடசாலையில் கல்வி கற்றார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

1995 ஆம் ஆண்டு சோமரத்தின திசாநாயக்க மற்றும் ரேணுகா பாலசூரிய ஆகியோரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த ‘இட்டி பகன்’ என்ற தொலைக்காட்சி நாடகத்தில் முதன்முறையாக நடித்தார். இந்நாடகத்தில் டெய்சி சுசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[3]

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பிஸ்சு டிரிபிள் என்ற சிங்களப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்பு பல வெற்றிப்படங்களில் நடித்தார்.[4]

சின்யான் பாதா பதின் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் ‘இனோகா’ என்ற கதாபாத்திரத்திலும், சந்துவரன்யா என்ற நாடகத்தில் டான்யா என்ற கதாபாத்திரமும் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது.[5]

இலங்கை சிங்களத் திரைப்பட வரலாற்றில் மிகப் பிரபலமான நடிகைக்கான விருதை வென்ற இளவயது நடிகை அனார்கலி ஆவார்.[6] 22 இற்கும் அதிகமான திரைப்படங்களிலும், 10 தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து முன்னணியில் உள்ளார். நிறுவன விளம்பர தூதராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.[7]

அனர்கலி பல இசைக் காணொளிகளிலும் நடித்துள்ளார். பாத்தியா, சந்தோசின் மீதம் செலென் காணொளி, துசன்த்தின் ஜெத்து நன் ஆகிய புகழ்பெற்ற காணொளிகளில் நடித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு லக்ஸ் தெரண பட விருதில் மிக பிரபலமான நடிகைக்கான விருதை வென்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அனர்கலி 2009 ஒக்டோபர் 29 இல் காலி மாவட்டத்தில் நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு,[8] தென் மாகாண சபைக்கு தெரிவானார்.

தொகுப்பாளர் பணி[தொகு]

தெரண தொலைக்காட்சியில் அனார்கலி நேரலை என்ற அவரது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[9]

2010 ஆம் ஆண்டு நடந்த தெரண இசை விருதுகளின் தொகுப்பாளினியும் ஆவார்.

தற்சமயம் சுவர்ணவாகினியில் அனர்கலியுடன் ஞாயிறு நேரலை எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

திரைப்பட விவரங்கள்[தொகு]

ஆண்டு படம் பங்கு மற்ற குறிப்புகள்
2003 பிஸ்ஸூ டிரிபள் நிசன்சலா முதல் படம்
2003 எக மலக பெடி டானியா
2003 வன் ஷாட் ஷெர்ரி
2005 ஹிரி போடா வெஸ்சா வீனா
2006 அஞ்சலிகா கவ்யா
2006 நிலாம்பரே
2007 சொந்தரு வசந்த அஞ்சு
2007 திரு டானா ரினா
2008 தாரக மல் சுரன்யா
2009 சிகுரு ஹதே
2009 சார் லாஸ்ட் சான்ஸ் ஆர்த்தியின் வருங்கால மனைவி
2010 மாகோ டிகோ டாய் நம்பிக்கையூட்டும்
2011 கிங் ஹன்தர் மொரின்
2011 எதுமய் மேதுமய் டீனா
2011 இட் இஸ் எ மேட்டர் ஒப் லவ் நடாஷா [10]
2013 சிஹினா லொவக் முக்கிய நடிகை
2015 சன்ஜனா சஞ்சனா
2016 ஜூலை 7 அனார்கலி

தொலைக்காட்சி நாடகங்கள்[தொகு]

ஆண்டு படம் பங்கு மற்ற குறிப்புகள்
1995 இட்டி பகன் டெய்ஸி சூசன்
2004 சிகினயக் பாட படின் இனோகா
சபையர் மற்றும் பட்டு தான்யா
இசி தசுனா
2005 அருனொதய கலப்பய
2006 சந்துன்வரய தான்யா
2007 குலா குமரிய சுவிமாலி
2009 சண்ட சக்கி
2010 ரன் தலிய வளுவா டொசடர நோனா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anarkalli Aakarsha". National Film Corporation Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
  2. [1]
  3. "Anarkalli in 'Iti Pahan'". Lankalibrary.com. Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
  4. "Anarkalli Aakarsha in 'Sihinayak Pata Patin'". Sundayobserver.lk. 25 சனவரி 2004. Archived from the original on 5 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டெம்பர் 2010.
  5. Anarkalli in 'Santhuwaranaya' பரணிடப்பட்டது 23 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம்
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  7. Anarkalli – Brand Ambassador for Veet பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  8. "Anarkalli for Southern Provincial Council Elections". Srilankan-stars.blogspot.com. 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
  9. "You are being redirected..." www.derana.lk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  10. "'ඉට්ස් අ මැටර් ඔෆ් ලව්'". Sarasaviya. Archived from the original on 13 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனர்கலி_ஆகர்சா&oldid=3586038" இலிருந்து மீள்விக்கப்பட்டது