அனபைட்டு
| அனபைட்டு Anapaite | |
|---|---|
உக்ரைன் நாட்டில் கிடைத்த அனபைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுபேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Ca2Fe2+(PO4)2·4H2O |
| இனங்காணல் | |
| நிறம் | பச்சை, பசும் வெண்மை முதல் நிறமற்றது வரை |
| படிக இயல்பு | தட்டையான படிகங்கள், இழைகள், முடிச்சுகள் |
| படிக அமைப்பு | முச்சாய்வு |
| பிளப்பு | சரிபிளவு {001}, {010} இல் தனித்துவம் |
| விகுவுத் தன்மை | நெகிழும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 2.8 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα=1.602, nβ=1.613, nγ=1.649 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.047 |
| பலதிசை வண்ணப்படிகமை | கண்களுக்குத் தெரியாது |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 52° to 56° |
| மேற்கோள்கள் | [1][2][3] |
அனபைட்டு (Anapaite) என்பது Ca2Fe2+(PO4)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம்-இரும்பு பாசுபேட்டு கனிமமான இது பொதுவாக புதைபடிவ வண்டல் பாறைகளில் உள்ள குழிகளில் காணப்படுகிறது. பாசுபேட்டு தாங்கியுள்ள இரும்பு தாதுக்களிலும் அரிதாகவே பெக்மாடைட்டு வகை பாறைகளிலும் காணப்படுகிறது. கோதைட்டு, சிடரைட்டு மற்றும் விவியானைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அனபைட்டு கனிமத்தை Anp[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
உருசியாவின் தாமன் தீபகற்பத்தில் உள்ள அனபா நகரத்தின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் கிடைத்த காரணத்தால் அனபைட்டு எனப் பெயரிடப்பட்டது. குறிப்பிடத்தக்க இடங்களில் கெர்ட்சு (கிரிமியா, உக்ரைன்), பெல்வர் டி செர்டான்யா (லீடா, கேட்டலோனியா, எசுப்பானியா) [1] [5]மற்றும் இத்தாலியின் டசுகனியில் உள்ள வால்டார்னோ ஆகிய பகுதிகளிலும் அனபைட்டு கனிமம் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Anapaite on Mindat.org
- ↑ Anapaite data on Webmineral.com
- ↑ Anapaite in the Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ Calvo, Miguel (2015). Minerales y Minas de España. Vol. VII. Fosfatos, Arseniatos y Vanadatos (in ஸ்பானிஷ்). Escuela Técnica Superior de Ingenieros de Minas de Madrid. Fundación Gómez Pardo. pp. 319–321.