அனன்யா பிர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனன்யா பிர்லா
2018இல் அனன்யா
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 17, 1994 (1994-07-17) (அகவை 29)
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்2016 – தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்உனிவர்சல் மியூசிக் இந்தியா
இணையதளம்ananyabirla.com

அனன்யா பிர்லா (Ananya Birla) (17 சூலை 1994) ஓர் இந்தியப் பாடகரும், பாடலாசிரியரும், தொழிலதிபரும் ஆவார். [1]

2016இல் இவரது முதல் தனிப்பாடலில் இருந்து,[2] இவர் 350 மில்லியனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த பார்வையாளர்களை அடைந்தார். [3] இவர் சீன் கிங்ஸ்டன், அஃப்ரோஜாக், மூட் மெலடிஸ் உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.[4] இந்தியாவில் ஆங்கில ஒற்றையர் பாடலில் பிளாட்டினம் நிலையை அடைந்த முதல் இந்திய கலைஞராவார். இவரது ஐந்து பாடல்கள் ஒற்றை பிளாட்டினம் அல்லது இரட்டை பிளாட்டினம் நிலையை அடைந்துள்ளது.[5]

2020 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சலஸில் மேவரிக் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் கையெழுத்திட்ட முதல் இந்தியர் ஆனார்.[6] "லெட் தெர் பீ லவ்" [7], "எவரிபடிஸ் லாஸ்ட்" போன்ற பாடல்களை வெளியிட்டு அமெரிக்க தேசிய முதல் 40 பாப் வானொலி நிகழ்ச்சியான சிரியஸ் எக்ஸ்எம் ஹிட்ஸ் இடம்பெற்ற முதல் இந்திய கலைஞரானார்.[8]

இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு சிறுநிதிகளை வழங்கும் சுதந்த்ரா சிறுநிதி நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் இகை ஆசை, [9] எம்பவர் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார் . அனன்யா தனது வேலை மற்றும் தொழில்முனைவிற்காக இடி பனாக் டிரெண்ட்செட்டர் 2016 இளம் வணிக நபருக்கான விருது உட்பட பல விருதுளைப் பெற்றுள்ளார். 2018இன் GQs மிகவும் செல்வாக்குள்ள இந்தியர்கள் ஒருவராகப் பட்டியலிடப்பட்டார்.

2020 ஆம் ஆண்டில், இவர் மன ஆரோக்கியம், சமத்துவம், கல்வி, நிதி சேர்க்கை, காலநிலை மாற்றம் மற்றும் மனிதாபிமான நிவாரண முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் அனன்யா பிர்லா அறக்கட்டளையை ஆதரிக்கத் தொடங்கினார். [10]

இவர் இந்தியத் தொழில் அதிபரும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார் மங்கலம் பிர்லாவின் மகளாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அனன்யா பிர்லா சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பதினோராவது வயதில் சந்தூர் இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக் கொண்டார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மையில் தனது இளங்கலை பட்டம் படித்தார். ஆனால் பட்டப்படிப்பை முடிக்காமல் படிப்பை கைவிட்டார்.

சமீபத்தில் இவர் ஏ. ஆர். ரகுமானுடன் இந்திய ஒலிம்பிக் அணிக்காக "இந்துஸ்தானி வழி" என்ற தலைப்பில் ஒரு மகிழ்ச்சியான பாடலை வெளியிட்டார்.

வணிக வாழ்க்கை[தொகு]

அனன்யா தனது 17 வயதில் சுதந்திரா சிறுநிதி நிறுவனத்தை நிறுவினார். இந்த அமைப்பு கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு சிறிய கடன்களை வழங்குகிறது. இவரது தலைமையின் கீழ், சுதந்திரா சிறந்த தொடக்கத்திற்கான தங்க விருதை வென்றுள்ளது.

2016 ஆம் ஆண்டில், அனன்யா இகை ஆசையின் (Ikai Asai) நிறுவனராகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்.[11] இது ஒரு சரக்கு அடிப்படையிலான உலகளாவிய சொகுசு இணைய-வணிகத் தளமாகும். [12] அதே ஆண்டு, போர்ப்ஸ் இவரை 'ஆசியாவின் கவனிக்கத்தக்க பெண்களில்' ஒருவராக அறிவித்தது.[13]

குளோபல் சிட்டிசன், அக்டோபர்ஃபெஸ்ட், சன்பர்ன், போன்ர ஆசியாவின் மிகப்பெரிய மின்னணு இசை விழாவான ஆசியாவின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சிகளில் இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[14] மேலும் விஸ் கலீஃபாவுடன் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார்.[15]

சொந்த வாழ்க்கை[தொகு]

அனன்யா இந்தியாவின் ஆறாவது பணக்காரரும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார் மங்கலம் பிர்லா-நீரஜா பிர்லா ஆகியோரின் மூத்த குழந்தையாவார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ananya Birla Talks the Rise of Pop Music In India, Her New Song 'Unstoppable' & Female Empowerment". Billboard. https://www.billboard.com/articles/news/8505554/ananya-birla-talks-pop-music-india-new-song-unstoppable. 
 2. "Ananya Birla is India's newest musician on the block". Vogue India (in Indian English). 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 3. "ImagineAR Announces Agreement with Indian Superstar Singer Ananya Birla – Company Announcement - FT.com". markets.ft.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 4. Wallace, Debra (2019-12-20). "India's Pop Star Ananya Birla Advises: 'Life Is About Learning From the Bad Times and Making Ourselves Stronger'". Parade: Entertainment, Recipes, Health, Life, Holidays (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 5. "Ananya Birla releases a lyric video for her "Blackout" single". Bong Mines Entertainment (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 6. Baddhan, Raj (2020-02-20). "Ananya Birla becomes first Indian artist to sign deal with Maverick". BizAsia | Media, Entertainment, Showbiz, Brit, Events and Music (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 7. "Ananya Birla / Overcoming Stereotypes, Stigma & New Single "Let There Be Love"". Flaunt Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 8. "Ananya Birla announces a new upcoming song, Let There Be Love". www.indulgexpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 9. "Indian home décor brands of the moment that are here to stay". Design Pataki (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 10. EE News Desk (1 October 2020). "Ananya Birla announces the launch of her Philanthropic Foundation". Everything Experiential. http://everythingexperiential.businessworld.in/article/Ananya-Birla-announces-the-launch-of-her-Philanthropic-Foundation-/30-09-2020-326620/. 
 11. "Indian home décor brands of the moment that are here to stay". Design Pataki (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 12. "Ananya Birla ventures into luxury ecommerce business with CuroCarte". Forbes India. 8 September 2016. http://www.forbesindia.com/article/special/ananya-birla-ventures-into-luxury-ecommerce-business-with-curocarte/44257/1. 
 13. "Asia's Women to Watch 2016". Forbes இம் மூலத்தில் இருந்து 2019-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190307054026/https://www.forbes.com/pictures/gigk45efh/ananya-birla-21-india/. 
 14. "Ananya Birla / Overcoming Stereotypes, Stigma & New Single "Let There Be Love"". Flaunt Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
 15. "Ananya Birla Shares 'Day Goes By' Video ft. Sean Kingston: Premiere". Billboard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனன்யா_பிர்லா&oldid=3848050" இலிருந்து மீள்விக்கப்பட்டது