உள்ளடக்கத்துக்குச் செல்

அனந்தவூர்

ஆள்கூறுகள்: 10°53′33″N 75°59′54″E / 10.8925500°N 75.9982900°E / 10.8925500; 75.9982900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தவூர்
Ananthavoor
கிராமம்
அனந்தவூர் Ananthavoor is located in கேரளம்
அனந்தவூர் Ananthavoor
அனந்தவூர்
Ananthavoor
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
அனந்தவூர் Ananthavoor is located in இந்தியா
அனந்தவூர் Ananthavoor
அனந்தவூர்
Ananthavoor
அனந்தவூர்
Ananthavoor (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°53′33″N 75°59′54″E / 10.8925500°N 75.9982900°E / 10.8925500; 75.9982900
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருநாவயா, மலப்புறம்
அரசு
 • வகைதிருநாவயா பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்17,470
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
6XXXXX
வாகனப் பதிவுகே.எல்-55

அனந்தவூர் (Ananthavoor) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திரூர் தாலுக்காவிலுள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]

மக்கள்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அனந்தவூர் கிராமத்தின் மக்கள் தொகை 17,470 ஆகும், இதில் 8,100 ஆண்கள் மற்றும் 9,370 பெண்கள் இருந்தனர்.[1] இந்த கிராமம் இடைக்காலத்தில் தனூர் (வெட்டட்நாடு) இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

பண்பாடு

[தொகு]

அனந்தவூர் கிராமம் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். இந்துக்கள் ஒப்பீட்டளவில் இங்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். எனவே இப்பகுதியின் கலாச்சாரம் இசுலாம் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். தஃப் முட்டு, கோல்கலி மற்றும் அரவணமுத்து ஆகியவை இந்த வட்டாரத்தில் காணப்படும் பொதுவான நாட்டுப்புறக் கலைகள் ஆகும். இசுலாமிய ஆய்வுகளின் வளமான ஆதாரத்தை வழங்கும் பல நூலகங்கள் பள்ளிவாசல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் அரபு-மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளன. இது அரபு எழுத்து எழுதப்பட்ட மலையாள மொழியின் பதிப்பாகும். மாலை நேர பிரார்த்தனைக்காக மக்கள் மசூதிகளில் கூடி, பிரார்த்தனைகளுக்குப் பிறகு சமூக மற்றும் கலாச்சார பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கின்றனர். இந்த மாலை கூட்டங்களின் போது வணிக மற்றும் குடும்ப பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள சிறுபான்மை இந்து மக்கள் தங்கள் கோயில்களில் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் தங்கள் வளமான பாரம்பரியத்தை பராமரிக்கிறார்கள். கேரளாவின் பிற பகுதிகளைப் போலவே இங்கு இந்து சடங்குகளும் வழக்கமான பக்தியுடன் செய்யப்படுகின்றன.[2]

போக்குவரத்து

[தொகு]

அனந்தவூர் கிராமம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் திரூர் நகரம் வழியாக இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 66 வலஞ்சேரி வழியாகச் செல்கிறது, மேலும் வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பையை இணைகிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரிலிருந்து தொடங்கி நெடுஞ்சாலைகள் 12,29 மற்றும் 181 வழியாக ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையம் கரிப்பூரில் உள்ளது. அருகிலுள்ள முக்கிய இரயில் நிலையம் திரூரில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 2008-12-10.
  2. "Malappuram News, Malappuram District Map, Malappuram Muslim, Malappuram Hospitals, Malappuram College, Malappuram Directory". Archived from the original on 2016-04-01. Retrieved 2016-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தவூர்&oldid=4198829" இலிருந்து மீள்விக்கப்பட்டது