அனந்தபூர் சாகிப் குருத்துவார்
தோற்றம்
அனந்தபூர் தக்த் கேஷ்கர் சாகிப் குருத்துவார் | |
---|---|
![]() அகால் தக்த்தின் கொடி | |
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | சீக்கியர்களின் ஐந்து அகால் தக்த்துகளின் ஒன்று [1] |
கட்டிடக்கலை பாணி | சீக்கியக் கட்டிடக்கலை |
முகவரி | அனந்த்பூர் சாஹிப், ரூப்நகர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
நகரம் | அனந்த்பூர் சாஹிப் |
நாடு | ![]() |
சீக்கியம் தொடரின் ஒரு பகுதி |
சீக்கியம் |
---|
![]() |
அனந்த்பூர் சாஹிப் கேஷ்கர் சாகிப் குருத்துவார் (Takht Kesgarh Sahib) சீக்கியர்களின் ஐந்து அகால் தக்த்துகளில் (அரியணை) ஒன்றாகும். இந்த குருத்துவார் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள அனந்த்பூர் சாஹிப் நகரத்திற்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சண்டிகரிலிருந்து 78 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. முகலாயப் பேரரசு ஆட்சியின் போது, இந்த குருத்துவார் சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கால் சீக்கியர்களின் பாதுகாப்பு அரணாக நிறுவப்பட்டது. அனந்த்பூர் சாஹிப் நகரத்தில் குரு கோவிந்த் சிங் 25 ஆண்டுகள் வாழ்ந்தார்.
படக்காட்சிகள்
[தொகு]-
1952ல் அனந்த சாகிப் குருத்துவார்
-
கேஷ்கர் கோட்டை
-
லோகர் கோட்டை
-
ஹோல்கர் கோட்டை
-
பதேகர் கோட்டை
-
தாராகர் கோட்டை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nabha, Kahan Singh (13 April 1930). Gur Shabad Ratanakar Mahankosh (1 ed.). Languages Department of Punjab, Patiala. p. ਅਕਾਲਬੁੰਗਾ. Archived from the original on 19 August 2016. Retrieved 21 October 2016.