அனந்தபுர ஏரிக் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தபுர ஏரிக் கோவில்
ஏரிக் கோயில்
அனந்தபுர ஏரிக் கோவில் is located in கேரளம்
அனந்தபுர ஏரிக் கோவில்
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:காசர்கோடு மாவட்டம்
அமைவு:நெய்கும்ப், கும்பலா
ஆள்கூறுகள்:12°35′03″N 74°58′47″E / 12.5842449°N 74.979776°E / 12.5842449; 74.979776ஆள்கூறுகள்: 12°35′03″N 74°58′47″E / 12.5842449°N 74.979776°E / 12.5842449; 74.979776
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து கட்டடக்கலை
இணையதளம்:http://ananthapuratemple.com/

அனந்தபுர ஏரிக் கோவில் (അനന്തപുര തടാകക്ഷേത്രം) என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் கோவிலாகும். இக்கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. கேரளத்தில் ஏரிக்குள் அமைந்திருக்கும் கோவில் இந்தக்கோவில் மட்டுமேயாகும். மேலும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி குடிகொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இதுவேயாகும். புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுவேயாகும்[1], [2]. இந்தக்கோவிலின் ஏரியில் ஒரு முதலையும் வசித்து வருகிறது, இந்த முதலை இக்கோவிலை காவல் காப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முதலை இறந்தால், அதன் இடத்தை வியக்கத்தக்க வண்ணம் இன்னொரு முதலை எடுத்துக் கொண்டு விடும். கும்பாலா என்ற இடம் மங்களூருவில் இருந்தோ அல்லது கண்ணூரில் இருந்தோ பல பேருந்து வழித்தடங்கள் மூலமாக எளிதாக அடைந்து விடலாம் மேலும் இரயில் வழியாகவோ அல்லது வாடகை வண்டிகள் மூலமாகவோ அடையலாம்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.kamalkapoor.com/hindu-spiritual-places/ananthapura-temple.asp