அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி
அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி (Ananthapuram G.Krishnamurthy, பிறப்பு: சூன் 4, 1950) தமிழகம் அறிந்த கல்வெட்டு அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
பணி[தொகு]
மின்சாரத்துறைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கல்வெட்டுக்களில் அதிக நாட்டமுள்ளவர். பணிக்காலத்தில் தன் ஓய்வு நேரத்தில் பல இடங்களுக்குக் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்று அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்துள்ளார்.
நூல்கள்[தொகு]
இவர் எழுதியுள்ள நூல்களில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.
- ஈயல் - ஓர் அறிவியல் விளக்கம் [1]
- கல்வராயன் மலை மக்கள் [2]
- வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள் [3]
- வரலாற்றில் திருக்கண்ணீச்சுரம் [4]
- வரலாற்றில் திருப்பாதிரிக்கோயில்
- செஞ்சிப்பகுதியில் சமணம் (1994) [5]
- சமண அற நெறிகள் (1998)
- காளி வழிபாடு (1998)
- தமிழர் பண்பாட்டில் சங்கு (1999)
- பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் (2008)[6]
வரலாற்றில் மணிமங்கலம்[தொகு]
வரலாற்றில் மணிமங்கலம் | |
---|---|
வரலாற்றில் மணிமங்கலம் | |
நூல் பெயர்: | வரலாற்றில் மணிமங்கலம் |
ஆசிரியர்(கள்): | அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி |
வகை: | ஊரின் வரலாறு |
துறை: | வரலாறு |
இடம்: | எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 304 |
பதிப்பகர்: | திருக்குறள் பதிப்பகம் |
பதிப்பு: | முதல் பதிப்பு 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
இவர் எழுதியுள்ள மற்றுமொரு நூல் வரலாற்றில் மணிமங்கலம்[1]. பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய காலங்கள் தொடங்கி காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள மணிமங்கலம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரைப் பற்றி கல்வெட்டுகள் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் 13 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.[2]
கல்வெட்டுகள், சிலைகள்[தொகு]
கள ஆய்வின்போது 50க்கும் மேற்பட்ட (சோழர் மற்றும் பல்லவர் கால) கல்வெட்டுக்களையும் 100க்கும் மேற்பட்ட (சோழர் மற்றும் பல்லவர் கால) சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் இவர், அண்மையில் சமணம் தொடர்பாக ஒரு பெருந்திட்டத்தினைத் தயாரித்து அளித்துள்ளார்.
உசாத்துணை[தொகு]
'வரலாற்றில் மணிமங்கலம்', நூல், (முதற்பதிப்பு, 2010; திருக்குறள் பதிப்பகம், பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை)
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- கீழ்வாலை எழுத்து வடிவங்கள், தினமணி சுடர் 1-8-1982, சிந்து எழுத்துச்சிக்கலுக்குத் தீர்வு [7]
- கீழ்வாலை பாறை ஓவியங்கள் சிந்து சமவெளி பண்பாட்டை குறிப்பிடுபவை தினமலர், 31 மே, 2014
- செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அரிச்சந்திரன் கல்லில் சிற்பம், தினமலர், திசம்பர் 27, 2010
- http://www.keetru.com/index.php/2011-02-02-02-47-25/2010-sp-638002476/13247-2011-02-27-06-13-16