அனந்தநாக் தொடருந்து நிலையம்
| தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | அனந்தநாக், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) இந்தியா |
| ஆள்கூறுகள் | 33°44′19″N 75°06′27″E / 33.7386°N 75.1074°E |
| ஏற்றம் | 1,599.89 மீட்டர்கள் (5,249.0 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே, இரயில்வே அமைச்சகம் |
| தடங்கள் | வடக்கு இரயில்வே |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | Standard on-ground station |
| தரிப்பிடம் | ஆம் |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | பயன்பாட்டில் |
| நிலையக் குறியீடு | ANT |
| பயணக்கட்டண வலயம் | வடக்கு இரயில்வே |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 2008 |
| மின்சாரமயம் | ஆம் |
அனந்தநாக் தொடருந்து நிலையம் (Anantnag Railway Station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த அனந்தநாக் நகரத்தில் உள்ளது. இந்த இரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 1,599.89 மீட்டர்கள் (5,249 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் அனந்தநாக்கிலிருந்து 5.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது வடக்கு இரயில்வேயின் . ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் இரண்டு நடைமேடைகள் கொண்டுள்ளது. அமர்நாத் கோயில் செல்லும் பக்தர்கள் இந்த அனந்தநாக் தொடருந்து நிலையத்தில் இறங்கிப் பயணிக்கலாம்.
தற்போது அனந்தநாக் தொடருந்து நிலையத்திலிருந்து பாரமுல்லா, சிறிநகர், பட்காம், பனிஹால், இராம்பன் (சங்கல்தன்), உதம்பூர் நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1]
ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு அனந்தநாக் தொடருந்து நிலையத்திலிருந்து ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களுடன் தொடருந்துகள் மூலம் இணைக்கப்படும்.