அனங்பூர் அணைக்கட்டு

ஆள்கூறுகள்: 28°27′45″N 77°15′52″E / 28.46250°N 77.26444°E / 28.46250; 77.26444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனங்பூர் அணைக்கட்டு
அனங்பூர் அணைக்கட்டு
அமைவிடம்தில்லி மற்றும் அரியானா
புவியியல் ஆள்கூற்று28°27′45″N 77°15′52″E / 28.46250°N 77.26444°E / 28.46250; 77.26444
கட்டத் தொடங்கியது8ஆம் நூற்றாண்டு
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஉள்ளூர் நீரோடை
உயரம்7மீ (23 அடி)
நீளம்50 மீ (164 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்நீர் வழங்கல் & நீர்ப்பாசனம்

இந்தியாவின் ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அனக்பூர் கிராமத்திற்கு ( அரங்பூர் என்றும் அழைக்கப்படுகிறது) அருகில் அமைந்துள்ள அனங்பூர் அணை (Anangpur Dam) மிகவும் பிரபலமான சூரஜ்குண்டிலிருந்து 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவு தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தனித்துவமான இந்திய நீரியல் பொறியியல் அமைப்பு 8 ஆம் நூற்றாண்டில் தோமரா வம்சத்தின் மன்னர் அனங்பாலின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த இடத்தை தில்லியில் இருந்து டெல்லி - மதுரா சாலை வழியாக அணுகலாம். அனங்பூரில் காணப்படும் காப்பரண்களின் இடிபாடுகள் இது 8 ஆம் நூற்றாண்டில் தில்லியின் முதல் நகரமாக உருவாகியிருந்த லால் கோட்டின் பகுதியாக இது இருந்திருக்கக்கூடும் என்ற அனுமாதத்தை நிறுவுகிறது. [1] இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு தாழ்வாரத்திற்குள் ஒரு முக்கியமான பல்லுயிர் பகுதியாகும். இது சரிஸ்கா தேசியப் பூங்காவிலிருந்து டெல்லி வரை நீண்டுள்ளது. சரணாலயத்தைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்கால் ஏரி (வடகிழக்கு 6 கி.மீ), 10 ஆம் நூற்றாண்டின் பண்டைய சூரஜ்குண்ட் நீர்த்தேக்கம், டம்டாமா ஏரி, துக்ளகாபாத் கோட்டை மற்றும் ஆதிலாபாத் இடிபாடுகள் (இவை இரண்டும் டெல்லியில் உள்ளவை), சதர்பூர் கோயில் (டெல்லி) ஆகியவை ஆகும்.[2] இது பருவகாலங்களில் மட்டும் தோன்றும் பரிதாபாத்தின் பாலி-தெளஜ்-கோட் கிராமங்களில் நீர்வீழ்ச்சிகளுக்கு [3] அருகில் உள்ளது. புனித மங்கர் பானி மற்றும் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயம் ஆகியவையும் அருகில் உள்ளனது. இப்பகுதியில் கைவிடப்பட்ட திறந்த சுரங்கக் குழிகளில் பல்வேறு ஏரிகள் உள்ளன.

இட அமைவு[தொகு]

ஆரவல்லி மலைகளில் தோன்றிய ஒரு உள்ளூர் நீரோடையின் மழைநீரை சேமிக்க இடைவெளியில் ஒரு அணை கட்டுவதன் மூலம் தடுக்கப்பட்டது. இது அடிப்படையில் நீர் சேகரிப்பு கட்டமைப்பாகும். இது மழைக்காலங்களில் மழைநீரை நீர்ப்பாசனத்தின் பயனுள்ள பயன்பாடுகளுக்காக சேமிக்கும். [4] [5]

வரலாறு[தொகு]

குர்ஜர் ஆட்சியாளர் அனக்பால் டோமர் / தன்வார் தனது தலைநகரை ஆரவல்லி மலைகளின் தெற்கே, இன்றைய டெல்லிக்கு தெற்கே 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாற்றினார். இன்றைய ஹரியானாவின் எல்லைக்குள், டெல்லியின் எல்லையில், அவர்கள் சுர்ஜாகுண்ட் கிராமத்திற்கு அருகே சூரஜ்குண்ட் நீர்த்தேக்கத்தையும், அரங்க்பூர் கிராமத்திற்கு அருகில் மற்றொரு அணையாக அனங்க்பூர் அணையைக் கட்டினர். அரங்க்பூர் அணையை மற்றும் சுர்ஜாகுண்ட் ஆகியவற்றைக் கட்டிய அனங்பால் (டெல்லியின் முதல் நகரம் என்று அழைக்கப்படும் லால் கோட்டைக் கட்டியவர் என்றும் அழைக்கப்படுபவர்) அதே வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர்களிருவரும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.[6]

அமைப்பு[தொகு]

அணைக்கட்டிலிருந்து நீர் வெளிவரும் மதகுத்திறப்பு

இந்த பழமையான திடமான ஈர்ப்பு அணைக்கட்டின் அமைப்பானது, இசுலாமிய காலத்திற்கு முந்தைய கால கட்டமைப்பாகும். இது உள்ளூர் சிற்றோடையின் குறுக்காக 7மீ உயரமும், 50 மீட்டர் நீளமும் கொண்ட அணையகும். இது உள்நாட்டில் கிடைக்கும் படிகப்பாறை கற்களைக் கொண்டு உளிகளால் அழகுபடுத்தப்பட்டு கட்டப்பட்டதாகும். இது ஒரு வழக்கமான அணைப் பிரிவைப் போன்று, இது அடித்தளம் வரை ஆழம் செல்லச் செல்ல அகலம் படிப்படியாக அதிகரிக்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது. இது அணையின் மேற்புறத்தில் இருந்து ஆட்கள் நுழைந்து அணையின் நடுப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்வதற்கும், மடை வழியாகச் செல்லும் நீரினை கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவான உள்நுழைத் துளை வழியைக் கொண்டுள்ளது. நீர் உட்செல்லும் நுழைவு நீரோட்டத்தின் மேலே உள்ள பக்கத்தில் உள்ளது. கீழ்நிலை மடையின் முடிவானது அணைக்குக் கீழே தட்டையான நிலப்பரப்புக்கு தரை மட்டத்தில் செல்கிறது. அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் பெரும்பாலும் பல நூற்றாண்டுகளாக சேற்றுப்படிவால் மேவப்பட்டிருக்கிறது. ஆனால், அது பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.[5][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anangpur Dam". Archived from the original on 2009-11-25. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
  2. ASOLA BHATTI WILD LIFE SANCTUARY பரணிடப்பட்டது 16 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம், Department of Forest, Delhi Government
  3. पाली गांव की पहाड़ियों पर डैम बनाकर रोका जाएगा झरनों का पानी
  4. Sharma, Y.D. (2001). Delhi and its Neighbourhood. New Delhi: Archaeological Survey of India. பக். 100- இம் மூலத்தில் இருந்து 2005-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050831215230/http://www.indiaclub.com/shop/SearchResults.asp?ProdStock=8780. பார்த்த நாள்: 2009-09-05. "Page 100:Suraj Kund lies about 3 km (1.9 mi) south-east of Tughlaqabad in district Gurgaon---The reservoir is believed to have been constructed in the tenth century by King Surjapal of Tomar dynasty, whose existence is based on Bardic tradition. Page 101: About 2 km south-west of Surajkund, close to the village of Anagpur (also called Arangpur is a dam ascribed to Anagpal of the Tomar Dynasty, who is also credited with building the தில்லியின் வரலாறு" 
  5. 5.0 5.1 Peck, Lucy (2005). Delhi - A thousand years of Building. New Delhi: Roli Books Pvt Ltd.. https://www.vedamsbooks.com/no43813.htm. பார்த்த நாள்: 2009-09-05. "One of the two significant structures in the area, the dam lies about 1 km [0.62 mi] to the north of the Anangpur village. A path from the main village street will lead you in to flat pastureland. Head for the small rocky hill ahead of you and climb over it. On the other side is another flat area, rather thickly covered in thorn trees. It is worth finding a way through them to the dam that straddles the gap between the two nearby hills. The dam is an impressive edifice 50 m [160 அடி] wide and 7 m [23 அடி] high built from accurately hewn quartzite blocks.---There is a passage for the egress of water at the level of the ground on the dammed side. The flat land across which you have walked is clearly caused by centuries of silt deposits in the lake that once existed behind this dam. The land around has been vwey heavily quarried recently, so further archaeological finds are unlikely." 
  6. Madan Mohan. "Spatial Data Modeling in GIS for Historical Restoration and Conservation of Cultural Heritage of Seven Cities of Delhi" (pdf). Department of Geography, Faculty of Natural Sciences, Jamia Millia Islamia (Central University) New Delhi, India. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Paani Yatra Challenge of the Balance" (PDF). Hauz-i-Shamsi. Centre for Science and Environment: Orientation programme for Oslo University students. 2002-12-31. p. 31. Archived from the original (pdf) on 2008-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனங்பூர்_அணைக்கட்டு&oldid=2964354" இலிருந்து மீள்விக்கப்பட்டது