அனங்கரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனங்கரங்கம் 15ஆம் அல்லது 16ஆம் நூற்றண்டுகளில் கல்யாண மல்லரால் இயற்றப்பட்ட ஒரு காம சாஸ்திர நூல் ஆகும். இந்நூலும், ரதி ரகசியம் என்ற நூலும் காம சூத்திரத்துடன் அவ்வப்போது ஒப்பீடு செய்யப்படும் நூல்களாகும். இந்நூல் கணவன் - மனைவி இடையில் நிகழும் பிரிவினை தடுக்கப்படுவதற்காகவே குறிப்பாக எழுதப்பட்டது. அனங்கரங்க நூலின் சில பகுதிகள் காம சூத்திரத்தைத் தழுவி எழுதப்பட்டவை.

இந்நூல் அஹமது கான் லோதி என்ற 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட லோதி வம்ச மன்னனின் மகன் லாத் கான் என்பவனுக்காக எழுதப்பட்டது.[1]

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலின் படி ஆண்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அழகான பெண்களை அடைவதால் மட்டுமே ஏற்படுகிறது. எனவே இன்பத்தை எய்துவதற்காக ஆண்கள் பெண்களை மணக்கின்றனர். எனினும் அவர்கள் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்துவது இல்லை. இதற்குக் காரணம் காம சாஸ்திரத்தை குறித்த அறியாமையும் பெண்களை குறித்த இகழ்ச்சியும் ஆகும். எனவே தான் ஆண்கள் பெண்களை விலங்குகளை போலவே நடத்துகின்றனர்.

கல்யாண மல்லர் ஆணுக்கு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் போதும் என்பதை நிலை நிறுத்த விரும்பினார். இந்நூலின் மூலம் கணவன் மனைவுக்கு இடையில் உள்ள பாலியல் உறவு மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பல பாலியல் நிலையிலான வேறுபாடுகள் மூலம், தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பம் 32. பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பத்தினை அதிகப்படுத்த இயலும் என இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரே விதமான பாலியல் வெளிப்பாட்டால் கணவன் மனைவி இடையில் ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விடுகிறது, அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே பல வேறுபாடுகள் மூலம் இந்த சலிப்பை தடுக்க முடியும்.

மேலும் இந்நூலில் முற்பாலுறவு செய்லபாடுகளும், வசியம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணின் பாலியல் ஈடுபாடு மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் அதிகமாக இருக்கும் என கல்யாண மல்லர் குறிப்பிட்டுள்ளார் [2]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனங்கரங்கம்&oldid=2213039" இருந்து மீள்விக்கப்பட்டது