உள்ளடக்கத்துக்குச் செல்

அனகோண்டா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனகோண்டா என்பது 1997ல் வெளிவந்த அமெரிக்க திகில் சாகச நடவடிக்கை திரைப்படமாகும். லூயிஸ் லோசா இயக்கிய இப்படத்தில் ஜெனிபர் லோபஸ், ஐஸ் கியூப், ஜான் வொயிட், எரிக் ஸ்டோல்ட்ஸ், ஜொனாதன் ஹைட் மற்றும் ஓவன் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியின் காரணமாக இப்படத்திற்கு தொடர்ச்சி படங்களும் வெளியிடப்பட்டன.

வரவேற்பு

[தொகு]

அனகோண்டா திரைப்படம் பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. சில விமர்சகர்கள் திரைப்படத்தின் கிராப்பிக்ஸ், காட்சியமைப்பு மற்றும் நகைச்சுவைகளை புகழ்ந்தனர், ஆனால் பலர் "மறக்க கூடிய" கதாப்பாத்திரங்கள், தவறுகள் மற்றும் மோசமான தொடக்கத்தை விமர்சித்தனர்.

அழுகிய தக்காளிகள், 50 பேரின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு 40% ஒரு "அழுகிய" மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. [1] மெட்டாகிரிடிக் , இந்த திரைப்படத்திற்கு 100 இல் 37 மதிப்பென் மட்டுமே வழங்கியுள்ளது. [2]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
விருது வகை நடிகர்கள் முடிவு
கோல்டன் ராஸ்பெர்ரி விருது மோசமான படம் வெர்னா ஹரா பரிந்துரைக்கப்பட்டது
கரோல் லிட்டில் பரிந்துரைக்கப்பட்டது
லியோனார்டு ரபினோவிட்ஸ் பரிந்துரைக்கப்பட்டது
மோசமான இயக்குனர் லூயிஸ் லோசா பரிந்துரைக்கப்பட்டது
மோசமான திரைக்கதை ஹன்ஸ் பாவர் பரிந்துரைக்கப்பட்டது
ஜிம் கேஷ் பரிந்துரைக்கப்பட்டது
ஜாக் எப்ஸ் ஜூனியர். பரிந்துரைக்கப்பட்டது
மோசமான நடிகர் ஜான் வொயிட் பரிந்துரைக்கப்பட்டது
மோசமான திரை ஜோடி பரிந்துரைக்கப்பட்டது
அனிமேட்டிக் அனகோண்டா பரிந்துரைக்கப்பட்டது
மோசமான புதிய நட்சத்திரம் பரிந்துரைக்கப்பட்டது
சாட்டர்ன் விருது சிறந்த நடிகை ஜெனிபர் லோபஸ் பரிந்துரைக்கப்பட்டது
சிறந்த திகில் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது

வசூல்

[தொகு]

இந்த படம் முதல் வார இறுதியில் $ 16.6 மில்லியனுடன் [3] முதல் இடத்தை பிடித்தது, மேலும் அடுத்த வாரமும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்திருந்தது. [4] மொத்தத்தில், அனகோண்டா உலகளவில் $ 136.8 மில்லியன் வசூல் செய்திருந்தது. [5] இது அதன் பட்ஜெட் ஆன $ 45 மில்லியனை விட மூன்று மடங்கு அதிகமான வசூலை ஈட்டியது.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனகோண்டா_(திரைப்படம்)&oldid=2938054" இலிருந்து மீள்விக்கப்பட்டது