அந்த கடைசி இலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓ ஹென்றி

அந்த கடைசி இலை என்பது அமெரிக்க சிறுகதை எழுத்தாளரான ஹென்றி அவர்களின் புகழ் பெற்ற சிறுகதை ஆகும். அவருடைய எழுத்துப்பிரவேசம் எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு நிகழ்ச்சி.அவர் சிறையில் இருந்தபோது கிடைத்த அதிகப்படியான ஓய்வு நேரத்தை செலவிட எழுத ஆரம்பித்தார். அவரின் எழுத்து வன்மையாலும் தனித்துவமான பாத்திரப்படைப்புகளாலும் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் பாங்கினாலும் வாசகர்கள் எதிர்பாராதவிதமான கதை முடிவுகளாலும் உலகின் முதன்மையான சிறுகதை எழுத்தரானார். ஆங்கில இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பெருந்தொண்டு காரணமாக ஓவ்வொரு வருடமும் மிகச்சிறந்த இரண்டு அமெரிக்க சிறுகதைகளுக்கு ஓ ஹென்றியின் பெயரால் இன்றளவும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது

கதைக்கரு[தொகு]

இச்சிறுகதை பழைய நியூயார்க் நகரில் உள்ள இரு பெண் கலைஞர்களின் வாழ்க்கையையும் தன் கலையில் தோல்வி அடைந்த ஒரு முதிர்ந்த ஓவியன் இறுதியில் தன்னலம் கருதாமல் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற குளிர் இரவில் சென்று கடைசி இலை ஓவியத்தை வரைந்து தன் உயிரைத் தியாகம் செய்ததையும் விவரிக்கும் ஒரு துக்கமான கதை ஆகும்.

இரு தோழிகள்[தொகு]

பழம்போக்கான கிரீன்விச் கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புற மூன்று மாடிக்குடியிருப்பில் சூ மற்றும் ஜான்சி என்ற இரு தோழிகள் தங்கள் ஓவிய நிலையத்தை அமைத்திருந்தனர். இருவரின் குணமும் கருத்துக்களூம் ஒத்திருந்ததால் உருவாகியிருந்தது அந்த ஓவிய நிலையம். ஒரு மே மாதத்தில் ஜான்சி நிமோனியா என்ற கொடிய நோயினால் தாக்கப்பட்டாள் அவளைப் பார்க்க வந்த மருத்துவர் சூ வை தனியாக அழைத்து ஜான்சி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவள் தானாகவே தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டது போல் தோன்றுகிறது என்றும் கூறிச்சென்றார். தன் உயிர்த்தோழியின் நிலைமையை நினைத்து அழுது தீர்த்தாள் சூ.

ஜான்சியின் விபரீத கற்பனை[தொகு]

ஜான்சி தன் அறை ஜன்னல் வெளியே உள்ள செங்கல் கட்டடத்தில் படர்ந்திருந்த இலைகளை கூர்ந்து கவனித்து வந்தாள். குளிர்காற்றினால் தாக்கப்பட்டு விழுந்துகொண்டிருந்த இலைகளை எண்ணிக்கொண்டிருந்தாள். கடைசி இலை கீழே விழும்போது தன்னுடைய உயிரும் போய்விடும் என்று நம்பிக் கொண்டிருந்தாள். தன் தோழி ஜான்சியின் இந்த விசித்திரமான கற்பனையைக்கண்டு சூ திகைத்தாள். சூ எவ்வளவோ அறிவுரைகள் கூறியும் ஜான்சியின் மனம் அதை ஏற்கவில்லை.

பெர்மனின் தியாகம்[தொகு]

கீழ்த்தளத்தில் வசிக்கும் பெர்மன் அறுபதைக் கடந்தும் கலைத்துறையில் சாதிக்க இயலாத ஓவியர். அக்குடியிருப்பில் வசிக்கும் இளம் கலைஞர்களுக்கு மாதிரியாக நின்று சிறிது பணம் சம்பாதித்தார்.அவர் எப்போதும் சூ மற்றும் ஜான்சியை காவல் காக்கும் உயர் ஜாதி நாய் போல் தன்னை கருதிக்கொண்டிருந்தார். அவரிடம் வந்து சூ, ஜான்சியின் பைத்தியக்காரத்தனமான கற்பனைகளையும் தன்னை அந்த பலவீனமான இலைகளைப் போல் நினைத்து தன் முடிவை எதிர்கொள்வது பற்றியும் கூறினாள். அதைக்கேட்டு பெர்மன் மிகவும் கோபப்படுகிறான். அன்று இரவு முழுவதும் கனத்த பனி மழை பெய்தும் அந்தக்கடைசி இலை விழுகாமல் இருப்பதைப்பார்த்த ஜான்சி தானும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள். சாக நினைப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

எதிர்பாராத முடிவு[தொகு]

ஜான்சியை பரிசோதிக்க வந்த மருத்துவர் சூ வை அழைத்து ஜான்சி தேறிவிட்டாள் என்றும் அவளுடைய உண்மையான அன்பான கவனிப்பால்தான் ஜான்சி உயிர் பிழைத்தாள் என்றும் பாராட்டினார். ஆனால் கீழ்த்தளாத்தில் உள்ள பெர்மன் நிமோனியா காய்ச்சலால் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறிச்சென்றார்.அன்று இரவு சூ நடந்த உண்மையை ஜான்சியிடம் கூறினாள். பெர்மன் நிமோனியா காய்ச்சலால் இறந்து விட்டார். அதற்கு காரணம் அவர் எப்படியும் ஜான்சியின் மனதை மாற்றி அவளைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பயங்கரமான குளிர் இரவில் கடைசி இலை அங்கிருந்து விழுந்தபிறகு அந்த இலையை அங்கு வரைந்திருக்கிறார். அதுவே பெர்மனின் காவியம். இச்சிறுகதையும் ஓ ஹென்றியின் தனித்துவமான ஆச்சரியமூட்டும் எதிர்பாராத முடிவுடன் முத்திரை படைத்துள்ளது. [1]

[2]

  1. https://en.wikipedia.org/wiki/The_Last_Leaf
  2. http://www.online-literature.com/o_henry/1303/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_கடைசி_இலை&oldid=2388370" இருந்து மீள்விக்கப்பட்டது