அந்த்துவார்
ஹந்த்துவார் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 34°23′59″N 74°16′54″E / 34.39972°N 74.28167°E[1] | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஜம்மு மற்றும் காஷ்மீர் |
| மாவட்டம் | குப்வாரா மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | அந்த்துவார் நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 291.47 km2 (112.54 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 13,600[2] |
| மக்கள் தொகை பரம்பல் | |
| • எழுத்தறிவு | 77.26% |
| • பாலின விகிதம் | 843 ♀/ 1000 ♂ |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | காஷ்மீரி மொழி, உருது, இந்தி டோக்ரி மொழி, ஆங்கிலம்[3][4] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 193221 |
| வாகனப் பதிவு | JK-09 |
| இணையதளம் | kupwara |
ஹந்த்துவார் (Handwara), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம். இது மாவட்டத் தலைமையிடமான குப்வாராவிற்கு தெற்கே 17.1கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் சிறிநகருக்கு வடமேற்கே 71.6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஹந்துவாரா நகரம் ஆப்பிள் தோட்டங்களுக்கும், வாதுமைக் கொட்டைக்கும் பெயர் பெற்றது.
புவியியல்
[தொகு]34°24′N 74°17′E / 34.40°N 74.28°E பாகையில் அமைந்த ஹந்துவாரா நகரம், கடல் மட்டத்திலிருந்து1,582 மீட்டர் (5,190 அடி) உயத்தில் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது. இந்நகரத்தில் ஜீலம் ஆற்றின் துணை ஆறான போக்ரு ஆறு பாய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 2,011 குடியிருப்புகளும் கொண்ட ஹந்த்துவார் நகராட்சியின் மக்கள் தொகை 13,600 ஆகும். அதில் 7,379 ஆண்கள் மற்றும் 6,221 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.25% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 843 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.26% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 0.43 % மற்றும் 0.12% ஆக உள்ளனர். இந்து சமயத்தினர் 8.25%, இசுலாமியர் 90.29%, சமணர்கள், கிறித்தவர்கள் 0.51%, சீக்கியர்கள் 0.54% மற்றும் பிற சமயத்தினர் 0.41% % வீதம் உள்ளனர்.[5]
கல்வி நிலையங்கள்
[தொகு]- அரசு மருத்துவக் கல்லூரி, ஹந்த்துவார்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஹந்த்துவார்
- அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, ஹந்த்துவார்
- அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, ஹந்த்துவார்
- அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஹந்த்துவார்
போக்குவரத்து
[தொகு]இரயில்
[தொகு]ஹந்த்துவாருக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரமுல்லா தொடருந்து நிலையம் ஆகும்.
சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 701 பாரமுல்லா-ரபியாபாத்-குப்வாரா- ஹந்த்துவார்-தங்தாரை நகரங்களை இணைக்கிறது.
தீவிரவாத தாக்குதல்கள்
[தொகு]2016 அந்த்துவார் இராஷ்டிரிய ரைபிள்ஸ் முகாம் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 திவீரவாதிகள் கொல்லப்பட்டனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Handwara (Google Maps)". Google Maps. Retrieved 15 November 2020.
- ↑ "Handwara Town population". Census India. Retrieved 15 November 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ Handwara Town Population Census 2011
- ↑ 3 militants killed near Rashtriya Rifles camp in J-K’s Handwara