அந்தோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோரைட்டு
Andorite
பொலிவியாவில் கிடைத்த அந்தோரைட்டு கனிமம், உயரம் 4.1 செ.மீ.
பொதுவானாவை
வகைசல்போவுப்புக் கனிமம்
வேதி வாய்பாடுPbAgSb3S6
இனங்காணல்
நிறம்அடர் எஃகு சாம்பல், மங்கிய மஞ்சள் அல்லது மாறுபட்ட வானவில் நிறங்கள்; வெண்மை
படிக இயல்புதடித்த பட்டகப் படிகங்கள் {100}, [001] இல் இணை வரிகள்; பெருத்த அளவு
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{110} இல்
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3 - 3.5
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.33 - 5.37
ஒளியியல் பண்புகள்திசைவேற்றுமை
மேற்கோள்கள்[1][2]

அந்தோரைட்டு (Andorite) என்பது PbAgSb3S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. உருமேனியா நாட்டின் மராமுரெசு மாகாணத்திலுள்ள பையா சிப்ரீ நகரத்தின் பையா சிப்ரீ சுரங்கத்தில் 1892 ஆம் ஆண்டு முதன்முதலில் அந்தோரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கேரி நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கனிமவியலாளர் அந்தோர் வோன் செம்செ (1833-1923) நினைவாக கனிமத்திற்கு அந்தோரைட்டு எனப் பெயரிடப்பட்டது.

அந்தோரைட்டு தாழ்வெப்ப பல்லுலோக நீர்வெப்ப விளிம்புகளில் தோன்றுகிறது. சிடிப்னைட்டு, சிபாலரைட்டு, பேரைட்டு, புளோரைட்டு, சிடெரைட்டு, கேசிட்டரைட்டு, ஆர்சனோபைரைட்டு, சிடானைட்டு, சிங்கெலைட்டு, டெட்ராகீட்ரைட்டு, பைரைட்டு, அலுனைட்டு, குவார்ட்சு, பைரார்கைட்டு, சிடெப்பானைட்டு, ரோடோகுரோசைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து அந்தோரைட்டு கனிமம் கிடைக்கிறது[2].

அந்தோரைட்டின் கூர்மையான படிகங்கள் (7 மி.மீ) சிடானைட்டு தொகுதியுடன், சான் யோசு சுரங்கம், பொலிவியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andorite: Mindat mineral information and data". 2010. Archived from the original on 21 January 2010. பார்க்கப்பட்ட நாள் 5 February 2010.
  2. 2.0 2.1 Handbook of Mineralogy
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோரைட்டு&oldid=2944588" இலிருந்து மீள்விக்கப்பட்டது