உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தோனி லோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனி லோக்
Anthony Loke
2024-இல் அந்தோனி லோக்
மலேசிய போக்குவரத்து அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2022
(இரண்டாம் தவணை)
பதவியில்
21 மே 2018  24 பிப்ரவரி 2020
(முதல் தவணை)
சிரம்பான் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
5 மே 2013
முன்னையவர் ஜான் பெர்னாண்டஸ்
பெரும்பான்மை12,553 (2013); 30,694 (2018); 30,841 (2022)
ராசா மக்களவைத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008  5 மே 2013
முன்னையவர் கோ சியோவ் உவாட்
பின்னவர் தியோ கோக் சியோங்
பெரும்பான்மை13,151 (2008)
நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்
சென்னா சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
5 மே 2013
முன்னையவர் சியோவ் சென் பின்
பெரும்பான்மை1,098 (2013); 1,155 (2018) ; 2,200 (2023)
நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்
லோபாக் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
21 மார்ச் 2004  5 மே 2013
முன்னையவர் கூ செங் கோக்
பின்னவர் சியோ கிம் லியோங்
பெரும்பான்மை1,842 (2004); 6,928 (2008)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லோக் சியூ போக்

28 ஏப்ரல் 1977
சிரம்பான்
அரசியல் கட்சி ஜசெக (1994 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
காகாசான் (1994–1996); மாற்று முன்னணி (1999–2004); பாரா (2008–2015); பாக்காத்தான் (2015 முதல்)
துணைவர்நிங் சி லிங்
கல்விசெயின்ட் பால் பள்ளி, சிரம்பான்
முன்னாள் மாணவர்மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
இணையத்தளம்lokesiewfook.blogspot.com

அந்தோனி லோக் எனும் அந்தோனி லோக் சியூ பூக் (ஆங்கிலம்; மலாய்: Anthony Loke எனும் Anthony Loke Siew Fook; சீனம்: 陆兆福) (பிறப்பு: 28 ஏப்ரல் 1977) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் திசம்பர் 2022 முதல் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தில் போக்குவரத்து அமைச்சராகவும்; அதற்கு முன்னர் மே 2018 முதல் பிப்ரவரி 2020 வரை பாக்காத்தான் அரப்பான் நிர்வாகம் சரியும் வரை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் அரப்பான் நிர்வாகத்திலும் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

இவர் மார்ச் 2008 முதல் மே 2013 வரை ராசா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும்; மே 2013 முதல் சிரம்பான் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MP) பணியாற்றியுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராக மார்ச் 2004 முதல் மே 2013 வரை லோபாக் சட்டமன்றத் தொகுதியிலும் (Lobak State Constituency); மே 2013 முதல் சென்னா சட்டமன்றத் தொகுதியிலும் (Chennah State Constituency) பணியாற்றி உள்ளார்.

அரசியல்

[தொகு]

இவர் ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினர் ஆவார். ஜசெக கட்சியானது பாக்காத்தான் (PH); மற்றும் பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணிகளின் உறுப்புக் கட்சியாகும்.

அந்தோனி லோக், மார்ச் 2022 முதல் ஜசெக கட்சியின் 6-ஆவது பொதுச் செயலாளராகவும்; சூலை 2018 முதல் மார்ச் 2022 வரை ஜசெக கட்சியின் 2-ஆவது நாடாளுமன்றத் தலைவராகவும்; அதற்கு முன்னர் ஜசெக கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளராகவும்; ஜசெக கட்சியின் இளைஞர் தலைவராகவும் (DAPSY) பணியாற்றியுள்ளார். இவர் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், நெகிரி செம்பிலான் மாநில பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

அந்தோனி லோக், மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பானில் பிறந்தார். சிரம்பான் செயின்ட் பால் பள்ளி மற்றும் செரி அம்பாங்கான் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 2000-ஆம் ஆண்டில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) மேம்பாட்டு அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1994-இல், ஜசெக உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயதான 17 வயதில் அந்தோனி லோக் ஜசெக கட்சியில் சேர்ந்தார். 2004-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், லோபாக் மாநிலத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜசெக கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட பிறகு, அந்தோனி லோக் தனது முதல் தேர்தல் களத்தில் இறங்கினார்.

அவர் அத்தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக லோபாக் சட்டமன்ற உறுப்பினராக நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது சட்டமன்றப் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு, 2008-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022

[தொகு]

2008 பொதுத் தேர்தலில், அந்தோனி லோக் ராசா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 பொது மற்றும் மாநிலத் தேர்தலில், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் சென்னா சட்டமன்றத் தொகுதியிலும், மலேசிய நாடாளுமன்றத்தில், சிரம்பான் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

2018 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, பாக்காத்தான் அரப்பான் அரசாங்கத்தை வழிநடத்த மகாதீர் முகமது பிரதமராக நியமிக்கப்பட்டார். 21 மே 2018 அன்று, அந்தோனி லோக் மலேசிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] 2020 அரசியல் நெருக்கடியில், பாக்காத்தான் அரப்பான் ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, 24 பிப்ரவரி 2020 அன்று, அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2022 பொதுத் தேர்தலில் அந்தோனி லோக் மீண்டும் தனது சிரம்பான் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் அன்வர் இப்ராகீம், அந்தோனி லோக்கை மீண்டும் போக்குவரத்து அமைச்சராக நியமித்தார்.

அந்தோனி லோக் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், மலேசிய போக்குவரத்து அமைப்பை இலக்கவியல் மயமாக்குவதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்[5][6][7][8][9][10][11]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2004 N11 லோபாக் அந்தோனி லோக் (ஜசெக) 5,991 59.08% கூ செங் கோக் (மசீச) 4,149 40.98% 10,338 1,842 70.87%
2008 அந்தோனி லோக் (ஜசெக) 9,244 80.00% சியோவ் கோய் லூன் (மசீச) 2,316 20.00% 11,714 6,928 77.26%
2013 N01 சென்னா அந்தோனி லோக் (ஜசெக) 5,128 55.99% சியோ பூ வென் (மசீச) 4,030 44.01% 9,372 1,098 83.75%
2018 அந்தோனி லோக் (ஜசெக) 5,031 50.91% சீட் தி கீ (மசீச) 3,876 39.22% 10,051 1,155 82.94%
சமலுஸ் மன்சோர் (பாஸ்) 975 9.87%
2023 அந்தோனி லோக் (ஜசெக) 5,888 61.49% ரோசுமாடி அரிப் (பெர்சத்து) 3,688 38.51% 9,576 2,200 65.80%
மலேசிய மக்களவை[5][6][7][8][9][10][11]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2008 P130 ராசா மக்களவைத் தொகுதி அந்தோனி லோக் (ஜசெக) 34,271 61.87% இயோ சாய் தியாம் (மசீச) 21,120 38.13% 56,654 13,151 78.56%
2013 P128 சிரம்பான் மக்களவைத் தொகுதி அந்தோனி லோக் (ஜசெக) 45,628 53.12% இயோ சாய் தியாம் (மசீச) 33,075 38.52% 87,617 12,553 85.64%
அப்துல் அலிம் அப்துல்லா (பெர்ஜாசா) 6,866 8.00%
ஜான் பெர்னாண்டஸ் (சுயேச்சை) 221 0.26%
பூஜாங் அபு (சுயேச்சை) 83 0.10%
2018 அந்தோனி லோக் (ஜசெக) 55,503 60.45% சோங் சின் ஊன் (மசீச) 24,809 27.02% 93,254 30,694 84.65%
சரிபுதீன் அகமது (பாஸ்) 11,506 12.53%
2022 அந்தோனி லோக் (ஜசெக) 63,920 51.85% முகம்ட் பட்லி செ மே (பாஸ்) 33,076 26.83% 124,729 30,844 79.32%
வோங் இன் திங் (மசீச) 24,584 19.94%
முகமட் ஜானி இசுமாயில் (பெஜுவாங்) 1,336 1.08%
இசாட் லெசுலி (சுயேச்சை) 373 0.30%

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anthony Loke infographic". Bernama. 21 May 2018. Archived from the original on 21 May 2018. Retrieved 2018-05-21.
  2. Raja Rahim, Raja Noraina (10 May 2018). "PKR wins big in Negri Sembilan". New Straits Times. https://www.nst.com.my/news/politics/2018/05/367875/pkr-wins-big-negri-sembilan.
  3. "DAP's Anthony Loke wins Seremban parliamentary seat". The Star (Malaysia). 10 May 2018 இம் மூலத்தில் இருந்து 2018-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180513022905/https://www.thestar.com.my/news/nation/2018/05/10/dap-anthony-loke-wins-seremban-parliamentary-seat/.
  4. Langewiesche, William (1 July 2019). "What Really Happened to Malaysia's Missing Airplane" via The Atlantic.
  5. 1 2 "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). Election Commission of Malaysia. Retrieved 4 February 2017. Percentage figures based on total turnout.
  6. 1 2 "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 election.
  7. 1 2 "KEPUTUSAN PILIHAN RAYA UMUM 13". Sistem Pengurusan Maklumat Pilihan Raya Umum (in மலாய்). Election Commission of Malaysia. Archived from the original on 14 March 2021. Retrieved 24 March 2017.
  8. 1 2 "my undi : Kawasan & Calon-Calon PRU13 : Keputusan PRU13 (Archived copy)". www.myundi.com.my. Archived from the original on 31 மார்ச் 2014. Retrieved 9 ஏப்ரல் 2014.
  9. 1 2 "Keputusan Pilihan Raya Umum ke-13". Utusan Malaysia. Archived from the original on 21 March 2018. Retrieved 26 October 2014.
  10. 1 2 "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14" (in மலாய்). Election Commission of Malaysia. Archived from the original on 13 September 2020. Retrieved 17 May 2018. Percentage figures based on total turnout.
  11. 1 2 "Federal Government Gazette, Results of Contested Election Parliamentary Constituencies for the State of Negeri Sembilan" (PDF). Election Commission. Retrieved 13 Jun 2018. [தொடர்பிழந்த இணைப்பு] Percentage figures based on total turnout.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_லோக்&oldid=4554184" இலிருந்து மீள்விக்கப்பட்டது