அந்தோனி ஆகுவேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனி ஆகுவேர் Anthony Aguirre
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைஅண்டவியல் இயற்பியல்
பணியிடங்கள்க.ப, சாந்தா குரூசு

அந்தோனி ஆகுவேர் (Anthony Aguirre) ஒரு கோட்பாட்டு அண்டவியலாளர் ஆவார்.[1] ஆகுவேர் சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார் . இவர் இங்கு தகவல் இயற்பியல் பாகின் தலைமைக் கட்டிலில் பணியாற்றுகின்றார். இவர் அடிப்படை கேள்விகள் நிறுவனத்தின் இணை இயக்குநரும் ஆவார்.[2] இவர் இங்கு அமைந்த எதிர்கால வாழ்க்கை நிறுவனத்தின் இணைநிறுவனரும் ஆவார்.[3][4][5][6] இவர் 2015 இல் மெட்டகுலசு எனும் ஒருங்கிணைந்த முற்கணிப்புத் தகவல்தளத்தை கிரிகொரி இலாகிலின் உடன் இணைந்து நிறுவினார். இவர் 2019 இல்அண்டவியல் ஆளுமைகள் எனும் மக்கள் அண்டவியல் நூலை வெளியிட்டார்[7]

கல்வி[தொகு]

ஆகுவேர் 1995 இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து கணிதையல்/இயற்பியலில் இளம் அறிவியல் பட்டமும் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1998 இல் வானியலில் மூதறிவியல் ப்ட்டமும் பின்னர் அங்கேயே வானியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவரது ஆய்வுகள் கோட்பாட்டு இயற்பியலில் தொடக்கநிலைப் புடவி, புடவியின் உப்பல், குவைய இயக்கவியலின் அடித்தளங்கள், புள்ளியியல்சார் இயக்கவியலின் அடித்தளங்கள், ஈர்ப்பு இயற்பியல், முதல் விண்மீன்கள், பால்வெளியிடை ஊடகம், பால்வெளி உருவாக்கம், கருந்துளைகள் எனப் பல புலங்களில் அமைந்தன இவர் மாக்சு தெக்மார்க்குடன் இணைந்து குவைய இயக்கவியலுக்கான அண்டவியல் விளக்கத்தை வழங்கினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் ஓவியரான சால்லி ஆகுவேரை மணந்தார்.[8] They have two sons.

ஊடகப்பணி[தொகு]

  • உண்மைக்கு அணுக்கமாக எனும் தொலைக்காட்சித் தொடரின் அண்டம் எவ்வளவு விரிந்தது? என்ற பகுதியில் ஆகுவேர் தோன்றுகிறார்.
  • அண்டம் எவ்வளவு பெரியது? என்ற தொலைக்காட்சித் தொடரிலும் ஆகுவேர் தோன்றுகிறார்."[9]
  • தேசிய புவிப்பரப்பியல் ஆவணமாகிய நேரடி அறிவியல் தொலைக்காட்சித் தொடரின் பகுதியான இணைநிலை புடவியில் வாழ்தல் தொடரில் ஆகுவேர் தோன்றுகிறார்.[10]
  • 2019 ஜூன் 17 அன்று அண்டவியல், சென்மரபு, குலைதிறம், தகவல் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட சீன் கரோலின் மனவெளிக் காணொலி பரப்புரையில் ஆகுவேர் விருந்து பாத்திரமாக வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Anthony Aguirre, PhD".
  2. "Who we are". Foundational Questions Institute. பார்க்கப்பட்ட நாள் 25 Nov 2014.
  3. "Who we are". Future of Life Institute. பார்க்கப்பட்ட நாள் 25 Nov 2014.
  4. "Elon Musk:Future of Life Institute Artificial Intelligence Research Could be Crucial". Bostinno. Archived from the original on 2 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 5 Jun 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Elon Musk donates $10M to keep AI from going full Skynet". Engadget. பார்க்கப்பட்ட நாள் 5 Jun 2015.
  6. "Elon Musk Donates $10 Million to Keep Us Safe from Artificial Intelligence". TechTimes. பார்க்கப்பட்ட நாள் 5 Jun 2015.
  7. "Cosmological Koans publisher page". Archived from the original on 28 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 Aug 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Breathing Space Sculpture - About the Artist". Archived from the original on 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2014-10-25.
  9. "How Big is the Universe?".
  10. "Living in a Parallel Universe".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_ஆகுவேர்&oldid=3927059" இலிருந்து மீள்விக்கப்பட்டது