உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தோனி அல்பனீசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அந்தோனி அல்பனீசி
Anthony Albanese
2022 இல் அல்பனீசி
ஆத்திரேலியாவின் 31-வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2022
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்தாவீது அர்லி
முன்னையவர்இசுக்காட் மொரிசன்
ஆத்திரேலியத் தொழில் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
துணைத் தலைவர்ரிச்சார்டு மார்லசு
முன்னையவர்பில் சோர்ட்டன்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
30 மே 2019 – 23 மே 2022
பிரதமர்இசுக்காட் மொரிசன்
துணைத் தலைவர்ரிச்சார்டு மார்லசு
முன்னையவர்பில் சோர்ட்டன்
பின்னவர்பீட்டர் டட்டன்
ஆத்திரேலியத் துணைப் பிரதமர்
பதவியில்
27 சூன் 2013 – 18 செப்டம்பர் 2013
பிரதமர்கெவின் ரட்
முன்னையவர்உவைன் சுவான்
பின்னவர்வாரன் திரசு
தொழிற்கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
26 சூன் 2013 – 13 அக்டோபர் 2013
தலைவர்கெவின் ரட்
முன்னையவர்உவைன் சுவான்
பின்னவர்தானியா பிலிபெர்செக்
உட்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013
பிரதமர்கெவின் ரட்
ஜூலியா கிலார்ட்
முன்னையவர்மார்க் வைல்
பின்னவர்வாரன் திரசு
அவைத் தலைவர்
பதவியில்
3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013
பிரதமர்கெவின் ரட்
ஜூலியா கிலார்ட்
Deputyஇசுட்டீவன் சிமித்
முன்னையவர்டோனி அபோட்
பின்னவர்கிறித்தோபர் பைன்
பிராந்திய அபிவிருத்தி, உள்ளாட்சி அமைச்சர்
பதவியில்
3 திசம்பர் 2007 – 14 செப்டம்பர் 2010
பிரதமர்கெவின் ரட்
ஜூலியா கிலார்ட்
முன்னையவர்ஜிம் லாயிடு
பின்னவர்சைமன் கிரீன்
கிரைன்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மார்ச் 1996
முன்னையவர்செனட் மெக்கியூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 மார்ச்சு 1963 (1963-03-02) (அகவை 61)
டார்லிங்கர்சுட், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அரசியல் கட்சிLabor
துணைவர்(கள்)
கார்மெல் டெபட்
(தி. 2000; பிரிவு 2019)
துணைஜோடி ஐடன்
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிசிட்னி பல்கலைக்கழகம் (BEc)
இணையத்தளம்anthonyalbanese.com.au
புனைப்பெயர்அல்போ

அந்தோனி அல்பனீசி (Anthony Norman Albanese, ஆந்தனி நோர்மன் அல்பனீசி,[1] பிறப்பு: 2 மார்ச் 1963) ஆத்திரேலிய அரசியல்வாதியும், தற்போதைய ஆத்திரேலியப் பிரதமரும் ஆவார்.[2] இவர் மே 2019 முதல் ஆத்திரேலியத் தொழில் கட்சியின் தலைவராக உள்ள அல்பனீசி, எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1996 முதல் கிரைண்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கெவின் ரட் அரசாங்கத்தின் கீழ் ஆத்திரேலியாவின் துணைப் பிரதமராக அல்பனீசி இருந்துள்ளார். 2013 மற்றும் 2007 முதல் 2013 வரை கெவின் ரட் மற்றும் ஜூலியா கிலார்ட் அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்தார்.

சிட்னியில் 1963 மார்ச் 2 இல் பிறந்த அல்பனீசி,[3] புனித மேரி கதீட்ரல் கல்லூரியில் கல்வி பயின்று,[4] சிட்னி பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பட்டப் படிப்பை முடித்தார்.[3] மாணவராக இருந்தபோதே தொழிற் கட்சியில் இணைந்தார்.[5] பின்னர் கட்சி அலுவலராகவும், உள்ளாட்சி அமைச்சில் ஆய்வுப் பணியாளராகப் பணியாற்றினார்.[6] அல்பனீசி ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவைக்கு 1996 தேர்தலில் நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் கிரைண்ட்லர் தொகுதியில் இருந்து தெரிவானார்.[7] 2001 இல் இவர் முதன் முதலாக தொழிற் கட்சியின் நிழல் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டார்.[3] 2006 இல் எதிர்க்கட்சி விவவகாரங்களுக்கான மேலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[3]

2007 தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அல்பனீசி நாடாளுமன்ற அவைத் தலைவராகவும், பிராந்திய அபிவிருத்தி, உள்ளாட்சி அமைச்சராகவும், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தார்.[8] 2010 முதல் 2013 வரை கெவின் ரட், ஜூலியா கிலார்ட் ஆகியோருக்கிடையே இடம்பெற்றுவந்த கட்சித் தலைமைப் போட்டியில், இவர் இருவருக்குமிடையே ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். 2013 சூன் மாதத்தில் அல்பனீசி கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆத்திரேலியாவின் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.[9]

2013 தேர்தலில் தொழிற்கட்சி தோவியடைந்ததை அடுத்து நடைபெற்ற தொழிற்கட்சித் தலைவர் போட்டியில், அல்பனீசி பில் சோர்ட்டனுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[10] பில் சோர்ட்டனின் நிழல் அமைச்சரவையில் அல்பனீசி இணைத்துக் கொள்ளப்பட்டார். 2019 தேர்தலிலும் தொழிற்கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, பில் சோர்ட்டன் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகினார். அல்பனீசி கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டு,[11] எதிர்க்கட்சித் தலைவரானார்.[12][13]

2022 மே 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அல்பனீசி இசுக்காட் மொரிசன் தலைமையிலான லிபரன்-தேசியவாதிகள் கூட்டணியைத் தோற்கடித்து ஆத்திரேலியாவின் 31-வது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட நான்காவது தொழிற்கட்சித் தலைவர் இவராவார்.[14][15] இவர் 2022 மே 23 இல் பிரதமராகப் பதவியேற்றார்.[16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. Webb, Tiger (30 May 2019). "Anthony Albanese can't decide how to pronounce his name, so don't ask him". ABC News. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
 2. Wu, David (22 May 2022). "Five Labor MPs to be immediately sworn in ahead of key Quad trip". Sky News Australia. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
 3. 3.0 3.1 3.2 3.3 "Hon Anthony Albanese MP". ஆத்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
 4. "Anthony Albanese". Australian Labor Party. Archived from the original on 5 February 2013. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
 5. "Crikey List: which MPs were involved in student politics?". Crikey. October 2010. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
 6. "Anthony Albanese". The Power Index. Archived from the original on 19 April 2013. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
 7. "Governor-General's Speech: Address-in-Reply: Maiden Speech". Parliament of Australia. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
 8. "Kevin Rudd sworn in as Prime Minister". ABC News (Australia). 3 December 2007. http://www.abc.net.au/news/photos/2007/12/03/2107673.htm. 
 9. Packham, Ben; Shanahan, Dennis (26 June 2013). "Gillard backers quit as Labor MPs return to Rudd to take on Abbott". The Australian. http://www.theaustralian.com.au/national-affairs/in-depth/gillard-backers-quit-as-labor-mps-return-to-rudd-to-take-on-abbott/story-fnhqeu0x-1226670418170. 
 10. Griffiths, Emma (13 October 2013). "Bill Shorten elected Labor leader over Anthony Albanese after month-long campaign". ABC News (Australia). http://www.abc.net.au/news/2013-10-13/bill-shorten-elected-labor-leader/5019116. 
 11. "Anthony Albanese to become Labor's new leader unopposed following shock federal election loss". ABC. 27 May 2019. https://www.abc.net.au/news/2019-05-27/anthony-albanese-the-new-labor-leader-following-election-loss/11152036?section=politics. 
 12. Murphy, Katharine (19 May 2019). "Anthony Albanese kicks off Labor leadership race with call for policy shift". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
 13. Martin, Sarah (27 May 2019). "Anthony Albanese elected unopposed as Labor leader" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/australia-news/2019/may/27/anthony-albanese-elected-unopposed-as-labor-leader. 
 14. "Australia election 2022: Scott Morrison to stand down as Liberal leader after conceding defeat; Labor hopeful of majority government – live update". the Guardian (in ஆங்கிலம்). 2022-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
 15. Worthington, Brett (22 May 2022). "With Anthony Albanese at the helm, Labor is projected to win 2022 federal election" (in en-GB). The Guardian. https://www.abc.net.au/news/2022-05-21/labor-anthony-albanese-projected-to-win-2022-federal-election/101084660. 
 16. "Anthony Albanese sworn in as Prime Minister". The New Daily. 23 May 2022. https://thenewdaily.com.au/news/politics/australian-politics/federal-election-2022/2022/05/23/anthony-albanese-sworn-in-pm/. 
 17. Worthington, Brett (23 May 2022). "Anthony Albanese and four senior frontbenchers sworn in ahead of Quad trip". ABC News. https://www.abc.net.au/news/2022-05-23/anthony-albanese-sworn-in-australian-prime-minister/101089902. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_அல்பனீசி&oldid=3939519" இலிருந்து மீள்விக்கப்பட்டது