அந்தோனியோ சாலியரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கத்திய செவ்விசை மேதை அந்தோனியோ சாலியெரி

அந்தோனியோ சாலியரி (Antonio Salieri) (ஆகஸ்ட் 18, 1750மே 7, 1825) அவர்கள் 18 ஆம் நூறாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற இசையறிஞரும் இசையமைப்பாளரும், இசைமேதையும் ஆவார். இவர் இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகரில் வாழ்ந்த மோட்சார்ட், லூட்விக் பேத்தோவன், ஜோசப் ஹேடன் ஆகியோர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். இவர் இத்தாலியில் லென்யாகோ (Legnago) என்னும் ஊரில் பிறந்தார். ஆஸ்ட்றியாவை ஆண்ட பேரரசர் இரண்டாவது ஜோசப்பு அவர்களின் அரசவையில் அரசவை இசையமைப்பாளரும் இயக்குனராகவும் (ஹோஃவ் கப்பல்மைஸ்ட்டர், Hofkapellmeister ஆக) சுமார் 36 ஆண்டுகள் இருந்தார். ஐரோப்பா முழுவதும் இவர் பெரும்புகழ் நாட்டி இருந்தார். இவருடைய 1787 ஆம் ஆண்டுப் படைப்பாகிய பிரெஞ்ச் மொழி ஓப்பரா தரேர் (Tarare) மிகவும் புகழ்பெற்றது. இதன் இத்தாலிய மொழிபெயர்ப்பாகிய அக்சூரே டோர்மஸ் (Auxurre d'Ormus) ன்பதை ஆஸ்ட்றிய மக்கள் பெரிதும் விருப்பினர்.

சாலியரியும் மோட்சார்ட்டும்[தொகு]

அந்தோனியோ சாலியரிக்கும் இசை மேதை மோட்சார்ட்டுக்கும் இடையே பெரும் போட்டியும் பொறாமையும் இருந்ததாகவும், சாலியரி மோட்சார்ட்டை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றும் ஒரு கதை நெடு நாட்களாக இருந்து வருகின்றது. இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. அமெடியாஸ் என்னும் கற்பனை திரைக் கதையும் இவர்களுடைய போட்டியை காட்டுகிறது. சாலியரி மோட்சார்ட்டின் த மாஜிக் ஃவுளூட் (The Majic Flute) என்னும் இசைப் படைப்பைப் பாராட்டி எழுதியதைப் பற்றி மோட்சார்ட் அவர்களே தெரிவித்து இருக்கின்றார். தம் வாழ்நாள் முழுவதும் சாலியரி அவர்கள் புகழ் பெற்ற இசைமேதைகளாகிய பேத்தோவன், ஹேடன் அவரகளுன் நட்பாய் இருந்தார். தம் 16 ஆம் அகவை (வயது) முதலே இசைநகரமாம் வியன்னாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனியோ_சாலியரி&oldid=2267337" இருந்து மீள்விக்கப்பட்டது