அந்தோணி மேக்கி
அந்தோணி மேக்கி | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 23, 1978 நியூ ஓர்லென்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஷெலெட்டா சாபிடல் (தி. 2014; ம.மு. 2018) |
பிள்ளைகள் | 4 |
உறவினர்கள் | கால்வின் மேக்கி (சகோதரன்) |
அந்தோணி மேக்கி (ஆங்கில மொழி: Anthony Mackie) (பிறப்பு:செப்டம்பர் 23, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 8 மைல் (2002), பிரதர் டு பிரதர் (2004), ஹேவன் (2004), த ஹர்ட் லாக்கர் (2009), கேங்க்ஸ்டர் ஸ்குவாட் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[1][2] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[3] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'சாம் வில்சன் / பால்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார். மற்றும் 2021 ஆம் ஆண்டு டிஸ்னி+ தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.[4][5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் நியூ ஓர்லென்ஸ்[6] நகரில் மார்தா மற்றும் வில்லி மேக்கி சீனியர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[7][8][9] இவரது சகோதரர் கால்வின் மேக்கி என்பவர் துலேன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முன்னாள் இணை பேராசிரியராக பணிபுரிந்தார். இப்போது லூசியானா மீட்பு ஆணையத்தில் பணிபுரிகிறார்.[10] இவர் 1997 இல் வட கரோலினா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் உயர்நிலைப் பள்ளியில் நாடக கலையில் பட்டம் பெற்றார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Graser, Marc (2012-07-16). "Mackie mulls Falcon in 'Captain America'". Variety. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.
- ↑ Obenson, Tambay A. (September 13, 2012). "Anthony Mackie Confirmed To Play Falcon In 'Captain America' Sequel". IndieWire. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
- ↑ Lussier, Germain (பெப்பிரவரி 24, 2015). "The Gang's All Here in the Official 'Avengers: Age of Ultron' Poster". /Film. Archived from the original on February 25, 2015. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015.
- ↑ Couch, Aaron (April 11, 2019). "Marvel's Kevin Feige Promises "Major Storylines" for Disney+ Shows". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 12, 2019.
- ↑ Fleming Jr., Mike (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் May 21, 2019.
- ↑ "Anthony Mackie – Overview". Allmovie. Archived from the original on June 11, 2009. பார்க்கப்பட்ட நாள் June 21, 2009.
- ↑ "April 2006 Obituaries Orleans Parish Louisiana". USGenWeb Archives. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
- ↑ "Anthony Mackie". TV Guide. பார்க்கப்பட்ட நாள் September 2, 2010.
- ↑ Preiser, Amy. "Interview With Anthony Mackie, Bar Owner, Actor, DIY Enthusiast". Homesessive. Archived from the original on July 18, 2012. பார்க்கப்பட்ட நாள் March 20, 2013.
- ↑ "Calvin Mackie, Ph.D". channelzro.com. Archived from the original on February 4, 2015. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
- ↑ "UNCSA Alumni Nominated for Tony Awards". University of North Carolina School of the Arts. 4 May 2010. Archived from the original on 29 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.