அந்தோணி பாப்புசாமி
| அந்தோனி பாப்புசாமி Antony Pappusamy | |
|---|---|
| மதுரை உயர்மறைமாவட்டம் | |
| நியமனம் | 26 சூலை 2014 |
| முன்னிருந்தவர் | பீட்டர் பெர்னாண்டோ |
| பின்வந்தவர் | அந்தோனிசாமி சவரிமுத்து |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | 7 சூலை 1976 |
| பிற தகவல்கள் | |
| பிறப்பு | 1 அக்டோபர் 1949 மாரம்பாடி ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் |
| வகித்த பதவிகள் | ஆயர், திண்டுக்கல் மறைமாவட்டம் |
| குறிக்கோளுரை | எழும்பு (ARISE) |
அந்தோனி பாப்புசாமி (Antony Pappusamy) [1] (பிறப்பு: அக்டோபர் 1, 1949) மதுரை உயர்மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் ஆவார்[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் மாராம்பாடி கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் இவர் பிறந்தார்.[3][4] திருச்சி கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்தார், மேலும் மதுரை செயின்ட் பீட்டர்சு பள்ளியில் லத்தீன் மற்றும் துவக்க நிலை படிப்புகளையும் முடித்தார். புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சியில் பட்டம் பெற்றார். திருச்சியின் புனித பவுல் இறையியல் பள்ளியில் இறையியல் படிப்பை முடித்தார்.[5]
ஆசாரியத்துவம்
[தொகு]7 சூலை 1976 அன்று கத்தோலிக்க திருச்சபையின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயராகத் நியமனம்
[தொகு]5 நவம்பர் 1998 அன்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் நியமிக்கப்ட்டார்.
4 பிப்ரவரி 1999 இல் அன்பினில் சேவை மலர்ந்திட என்ற விருதுவாக்குடன் அன்றைய மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு. மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களால் ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்டார்.1999 முதல் 2003 வரை துணை ஆயராகத் பணியாற்றினார் . 10 நவம்பர் 2003 அன்று திண்டுக்கல் மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் நியமிக்கப்பட்டார். 28 டிசம்பர் 2003 அன்று திண்டுக்கல் மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் பொறுப்பேற்றார். 26 சூலை 2014 அன்று திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் நியமிக்கப்பட்டார்.[3][6] 24 ஆகஸ்ட் 2014 அன்று மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் பொறுப்பேற்றார்.2014 முதல் 2024 வரை பேராயராகத் பணியாற்றினார். 04 நவம்பர் 2024இல் திருச்சபை சட்ட எண் 401 பிரிவு ஒன்றின்படி 75 ஆவது வயதில் பேராயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palayamkottai, Diocese of. "Heartily congratulate Most Rev. Antony Pappusamy D.D." www.palayamkottaidiocese.org. Retrieved 2017-08-21.
- ↑ "Apostolic Nunciature, India » The Installation of the New Archbishop of Madurai Antony Pappusamy". apostolicnunciatureindia.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-08-21.
- 1 2 "Archbishop Antony Pappusamy". Catholic Hierarchy. Retrieved 18 June 2017.
- ↑ "Archbishop Pappusamy". Archdiocese of Madurai. UCAN Directory. Archived from the original on 2 June 2017. Retrieved 18 June 2017.
- ↑ "Our Bishop – Archdiocese of Madurai". archdioceseofmadurai.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-09-27.
- ↑ "Pope appoints Archbishop for Madurai in South India". http://en.radiovaticana.va/news/2014/07/26/pope_appoints_archbishop_for_madurai_in_south_india/1103474. பார்த்த நாள்: 2017-08-21.