உள்ளடக்கத்துக்குச் செல்

அந்திச்சான் பிராந்தியம்

ஆள்கூறுகள்: 40°45′N 72°10′E / 40.750°N 72.167°E / 40.750; 72.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிஜன் பிராந்தியம்
Andijon viloyati
பிராந்தியம்
உஸ்பெகிஸ்தானில் ஆண்டிஜன்
உஸ்பெகிஸ்தானில் ஆண்டிஜன்
ஆள்கூறுகள்: 40°45′N 72°10′E / 40.750°N 72.167°E / 40.750; 72.167
நாடு உஸ்பெகிஸ்தான்
தலைநகரம்ஆண்டிஜன்
அரசு
 • ஹோகிம்ஷுரத்பெக் அப்துர்ரஹ்மனோவ்
பரப்பளவு
 • மொத்தம்4,303 km2 (1,661 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்29,62,500
 • அடர்த்தி690/km2 (1,800/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (East)
 • கோடை (பசேநே)ஒசநே+5 (not observed)
ஐஎசுஓ 3166 குறியீடுUZ-AN
மாவட்டங்கள்14
மாநகரங்கள்11
நகரியங்கள்0
ஊர்கள்95
இணையதளம்www.andijan.uz

ஆண்டிஜன் பிராந்தியம் (Andijan Region, உஸ்பெக் : Andijon viloyati / Андижон, ئەندىجان ۋىلايەتى) என்பது உஸ்பெகிஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இது உஸ்பெகிஸ்தானின் தூரக் கிழக்கில் உள்ள பெர்கானாப் பள்ளத்தாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது கிர்கிசுத்தான், பெர்கானா பிராந்தியம், நமங்கன் பிராந்தியம் போன்றவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இது 4,200 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 3,011,700 [1] என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிஜன் பிராந்தியமானது உஸ்பெகிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமாக உள்ளது.

ஆண்டிஜன் என்ற பெயரானது பாரசீக சொல்லான اندکان அந்தகனில் இருந்து உருவானது. [2]

ஆண்டிஜன் பிராந்தியம் 14 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரம் ஆண்டிஜன் நகரம் ஆகும். பிராந்தியத்தின் காலநிலை என்பது பொதுவாக கண்டம் சார்ந்த காலநிலை ஆகும். இது குளிர்காலம் மற்றும் கோடை வெப்பநிலைகளுக்கு இடையில் தீவிர வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களில் பெட்ரோலியம், இயற்கை எரிவளி, ஓசோகரைட், சுண்ணாம்பு கல் ஆகியவை அடங்கும். உஸ்பெகிஸ்தானின் பிற பகுதிகளைப் போலவே, இப்பகுதி மிகவும் சுவையான முலாம்பழம், தர்பூசணிக்கு புகழ் பெற்றது. ஆனால் நீர்பாசன வசதியுள்ள இடங்களில் மட்டுமே பயிர்களை மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது. மேலும் இங்கு வேளாண்மையில் பருத்தி, தானியங்கள், திராட்சை, கால்நடை வளர்ப்பு, காய்கறி தோட்டம் ஆகியவை அடங்கியுள்ளன.

தொழில்களில் உலோக பதப்படுத்துதல், வேதித் தொழில், சிறு தொழில், உணவு பதப்படுத்துதல் ஆகியவை அடங்கும் . மத்திய ஆசியாவில் முதல் தானுந்து ஒருங்காக்க ஆலையானது ஆண்டிஜன் பிராந்தியத்தில் உள்ள அசாக்காவில் உஸ்பெக்-கொரிய கூட்டு நிறுவனமான உஸ்டேவூவால் திறக்கப்பட்டது. இது நெக்ஸியா மற்றும் டிக்கோ மகிழுந்துகள் மற்றும் டமாஸ் சிற்றுந்துகளை உற்பத்தி செய்கிறது.

நிர்வாக பிரிவுகள்[தொகு]

ஆண்டிஜன் மாவட்டங்கள்
மாவட்ட பெயர் மாவட்ட தலைநகரம்
1 ஆண்டிஜன் மாவட்டம் குய்கன்யார்
2 அசகா மாவட்டம் அசகா
3 பாலிச்சி மாவட்டம் பாலிச்சி
4 போஸ் மாவட்டம் போஸ்
5 புலோக்போஷி மாவட்டம் புலோக்போஷி
6 இஸ்போஸ்கன் மாவட்டம் பேதுக்
7 ஜலக்டுக் மாவட்டம் அகுன்பபாவ்
8 கோட்ஜாபாத் மாவட்டம் கோட்ஜோபாத்
9 குர்கொண்டேபா மாவட்டம் குர்கொண்டேபா
10 மர்ஹமத் மாவட்டம் மர்ஹமத்
11 ஓல்டின்கோல் மாவட்டம் ஓல்டிங்கோல்
12 பக்தாபாத் மாவட்டம் பக்தாபாத்
13 ஷாக்ரிஹோன் மாவட்டம் ஷாக்ரிஹோன்
14 உலுக்னர் மாவட்டம் ஒகோல்டின்

குறிப்புகள்[தொகு]

  1. The State Committee of the Republic of Uzbekistan on Statistics
  2. Dehkhoda Dictionary பரணிடப்பட்டது அக்டோபர் 3, 2011 at the வந்தவழி இயந்திரம்