அந்தால்யா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அந்தல்யா மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அந்தால்யா மாகாணம் (Antalya Province, துருக்கியம்: Antalya ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியியல் தாரசு மலைத்தொடர் மற்றும் மத்திய தரைக்கடல் கடலுக்கு இடையில், தென்மேற்கு துருக்கியின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது.

துருக்கியின் சுற்றுலாத் துறையின் மையமாக அந்தால்யா மாகாணம் உள்ளது. இப்பகுதியானது துருக்கிக்குவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 30% பயணிகளை ஈர்க்கிறது. இதே பெயரில் உள்ள இதன் தலைநகரமானது 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கை பின்னுக்குத்தள்ளி சர்வதேச பயணிகளின் வருகையின் எண்ணிக்கையால் உலகின் மூன்றாவது அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக இடம்பிடித்தது. அந்தால்யா துருக்கியின் மிகப்பெரிய சர்வதேச கடற்கரை உல்லாச நகரம் ஆகும். அந்தால்யா மாகாணமானது கிழக்கில் உள்ள பண்டைய பம்பிலியா மற்றும் மேற்கில் உள்ள லைசியா ஆகியவற்றுக்கு இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது 657 km (408 mi) கடற்கரையுடன், உலக பாரம்பரிய தளமான சாந்தோஸ் உட்பட கடற்கரைகள், துறைமுகங்கள் மற்றும் பண்டைய நகரங்கள் போன்றவற்றை பரவலாக கொண்டுள்ளது. மாகாண தலைநகரான ஆந்தாலியா 1.001.318 மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

துருக்கியில் வேகமாக வளர்ந்து வரும் மாகாணம் அந்தால்யா; 1990-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 4.17% மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டதாக உள்ளது. இது தேசிய விகிதமான 1.83% உடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த வளர்ச்சியானது நகரமயமாக்கலின் வேகமான வளர்ச்சியால், குறிப்பாக சுற்றுலா மற்றும் கடற்கரையில் உள்ள பிற சேவைத் துறைகளால் சாத்தியமானது.

சொற்பிறப்பு[தொகு]

கிமு 2 ஆம் நூற்றாண்டில் நகரத்தை நிறுவிய பெர்கமான் மன்னர் இரண்டாம் அட்டலோஸ் என்பவரின் பெயரால் இந்த நகரத்திற்கும் மாகாணத்திற்கும் பெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

ஆஸ்பெண்டோஸ் அரங்கம்

பழமைத்தன்மை[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து மக்கள் அந்தால்யா பகுதியில் குடியேறினார். அந்தால்யா நகரின் வடக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள கரேன் குகையில், ஆரம்பகால பாலியோலிதிக் கால (150,000-200,000) ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடத்தின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1] மற்ற கண்டுபிடிப்புகளாக இடைக்காலம்சார் (பெல்டிபி குகை), புதிய கற்கால (பேடெமசாக் ஹேய்) மற்றும் சமீபத்திய காலங்கள் போன்ற பிற கண்டுபிடிப்புகள் இந்த பகுதி முழுவதும் பல்வேறு நாகரிகங்களால் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது.

மாவட்டங்கள் மற்றும் நகரங்கள்[தொகு]

இந்த மாகாணத்தின் கடலோர மாவட்டங்களாக; ஆந்தாலியா, காசிபனா, அலன்யா, மனவ்கட், செரிக், கெமர், கும்லுகா, ஃபினிகே, காலே மற்றும் காஸ் ஆகியவை உள்ளன

டாரஸ் மலைகளில் உள்பகுதி மாவட்டங்கள் அதிகமாக உள்ளன. அவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 900-1000 மீ.உ யரத்தில் உள்ளவையாக; குண்டோஸ்மு, அக்ஸெக்கி, ஆப்ராடா, கோர்குடெலி மற்றும் எல்மாலே போன்றவை உள்ளன.

நிலவியல்[தொகு]

அந்தால்யா மாகாணமானது தென்மேற்கு அந்தால்யாவில் தீர்க்கரேகைகள் 29 ° 20'-32 ° 35 'கிழக்கு மற்றும் அட்சரேகைகள் 36 ° 07'-37 ° 29' வடக்குக்கு இடையே அமைந்துள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் 26% (20591 சதுர மீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தெற்கு எல்லையாக மத்திய தரைக்கடல் கடலையும், வடக்கில் நில எல்லைகளாக தாரசு மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது. மேற்கிலிருந்து கிழக்கே இந்த மாகாணம் முலா, பர்தூர், இஸ்பார்டா, கொன்யா மற்றும் ஏல் மாகாணங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. மாகாணத்தின் நிலப்பகுதியானது 77.8% மலைப்பாங்கானது, 10.2% சமவெளி மற்றும் 12% சரிசமமற்ற நிலப்பகுதியாகும். டாரஸ் மலைகளின் சிகரங்கள் பல 500–3000 மீட்டருக்கு மேல் உள்ளன   மேற்கில் உள்ள டெக் தீபகற்பம் (பண்டைய லைசியாவுக்கு ஒத்திருக்கிறது) பரந்த பீடபூமிகள் மற்றும் நதிப் படுகைகளை உள்ளடக்கியது. உள்நாட்டு மலைப் பகுதிகளுக்கும் கடலோர சமவெளிக்கும் இடையில் காலநிலை, விவசாயம், புள்ளிவிவரங்கள் மற்றும் வாழ்விட முறைகள் மிகவும் வேறுபடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. See "Archived copy". Archived from the original on 2007-01-04. பார்க்கப்பட்ட நாள் 2007-02-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link) and
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தால்யா_மாகாணம்&oldid=3331437" இலிருந்து மீள்விக்கப்பட்டது