அந்தர்மாணிக்கு நதி

ஆள்கூறுகள்: 21°56′28″N 90°08′24″E / 21.941°N 90.140°E / 21.941; 90.140
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தர்மாணிக்கு நதி
Andharmanik River
அந்தர்மாணிக்கு நதி is located in வங்காளதேசம்
அந்தர்மாணிக்கு நதி
வங்கதேசத்தில் இருப்பிடம்
அமைவு
நாடுவங்காளதேசம்
மண்டலம்கலாபாரா துணை மாவட்டம்
மாவட்டம்பதுவாகாளி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
21°56′28″N 90°08′24″E / 21.941°N 90.140°E / 21.941; 90.140

அந்தர்மாணிக்கு நதி (Andharmanik River) வங்காளதேசத்தில் அமைந்துள்ளது. கங்கை-பத்மா ஆற்றுத் தொகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர பெரிய ஆறுகளில் இதுவும் ஒன்றாகும் வங்கதேசத்தின் பதுவாகாலி மாவட்டத்தில் உள்ள கலபாரா துணைமாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றுமாகும். சமீப ஆண்டுகளாக அந்தர்மாணிக்கு நதி படிப்படியாக வறண்டு வருவதால் கலாபாரா துணை மாவட்டத்தின் மக்கள் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 mi), ஆக இருந்த மொத்த நதியின் நீளம் குறைந்தது 25 கிலோமீட்டர்கள் (16 mi) ஆக குறைந்துள்ளதே இவர்களின் கவலைக்கு காரணமாகும். புதிய வண்டல் மண் படிவு காரணமாக இந்நதி நிரந்தரமாக வறண்டு விட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் அரசாங்கம் அந்தர்மாணிக்கு மற்றும் பிற அருகிலுள்ள ஆறுகளின் மீது பல அணைகளைக் கட்டியது. முக்கியமாக இந்தக் காலத்திலிருந்துதான் அந்தர்மாணிக்கு நதி வறண்டு போகத் தொடங்கியது. இந்த அணைகளில் மிகவும் செல்வாக்கு மிக்க அணைகளில் ஒன்று அந்தர்மாணிக்கு நதியின் ஊற்றுமூலமான கொச்சுபத்ரா ஆற்றின் மீது உள்ளது. கால்வாய்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பது, ஆற்றின் பகுதியில் கட்டுப்பாடற்ற விவசாயம் போன்றவையும் வண்டல் படிவதற்கான மற்ற காரணங்களாகும். 2013 ஆம் ஆண்டின் இறுதியில், அந்தர்மாணிக்கு ஆற்றின் கரையில் புதிய கடல் துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அப்போதிருந்து, இந்த நதி முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் நிபுணர்கள் தெற்கு வங்காளதேசத்தின் எதிர்கால பொருளாதார மையமாக இந்நதியை கணித்துள்ளனர். [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "আন্ধারমানিক নদী এখন অস্তিত্ব সঙ্কটে". Daily Gonokantho. Archived from the original on February 22, 2014. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014.
  2. "আন্ধারমানিক নদী আর আন্ধার থাকবে না এখন আলোকিত হবে। পায়রা সমুদ্র বন্দর উদ্ধোধন কালে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা". Desh Tothho. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014.
  3. "আন্ধারমানিক নদী অস্তিত্ব সঙ্কটে পর্ব-২". Patuakhali News. Archived from the original on February 21, 2014. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014.
  4. "আন্ধারমানিক নদী অস্তিত্ব সঙ্কটে পর্ব-১". Patuakhali News. Archived from the original on February 21, 2014. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014.
  5. "কলাপাড়ার ৪০ কিলোমিটার দীর্ঘ আন্ধারমানিক নদী এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে". Hello Today. Archived from the original on February 22, 2014. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தர்மாணிக்கு_நதி&oldid=3329040" இலிருந்து மீள்விக்கப்பட்டது