உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தமான் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கி (Andaman and Nicobar State Cooperative Bank Ltd) (சுருக்கமாக:ANSCBL), 6 சனவரி 1965 அன்று பதிவு செய்யப்பட்டு, 31 மார்ச் 1966 அன்று முதல் செயல்படத் துவங்கியது.[1]இதன் தலைமையிடம் 98, மௌலானா ஆசாத் சாலை, போர்ட் பிளேர் நகரத்தில் செயல்படுகிறது.[2]இவ்வங்கியின் நிர்வாகக் குழு ஒரு தலைவர் தலைமையில் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்களும், ஒரு மேலாண்மை இயக்குநரும் செயல்படுகின்றனர்.[3]

நோக்கம் & தொலைநோக்கு

[தொகு]

தொலைதூரத் தீவுகளில் உள்ள கிராமப்புற மக்களுக்கு கடனுதவி வழங்குதல், வங்கித் தயாரிப்புகள் மற்றும் பிற தொழில்முறை சேவைகளை வழங்குதல், துணை நிறுவனங்களை வலுப்படுத்துதல், கூட்டுறவு வங்கி முறைக்கு துடிப்பான தலைமையை வழங்குதல், நிலையான வளர்ச்சியை அடைதல் மற்றும் இறுதியில் வங்கித் துறையில் முதன்மையான நிலையை அடைதல் ஆகும்.[4]

வழங்கும் சேவைகள்

[தொகு]

கணக்குகள்

[தொகு]
  • சேமிப்பு கணக்குகள்
  • நடப்பு கணக்குகள்
  • தொடர் வைப்பு கணக்குகள்
  • வரையோலைகள்
  • பாதுகாப்பு பெட்டகங்கள்

கடன் வசதிகள்

[தொகு]
  • தொடக்க கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க கடன்கள், பயிர்க் கடன்கள் மற்றும் பிற கடன்களை வழங்குதல்
  • பால் மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்குதல்
  • வீடு கட்டும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன்கள் வழங்குதல்
  • நகைக் கடன் வழங்குதல்
  • தானுந்து கடன் வழங்குதல்
  • தனிநபர் கடன்
  • தானியங்கி இயந்திரம் மூலம் பணம் பெறும் வசதிகள்

கிளைகள்

[தொகு]

இவ்வங்கிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தெற்கு அந்தமான் மாவட்டம், வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் மற்றும் நிகோபார் மாவட்டங்களில் 40 கிளைகளைக் கொண்டுள்ளது.[5]

மேலோட்டம்

[தொகு]

அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுமைக்கும் முன்னணி வங்கியாகச் செயல்படும் இவ்வங்கி தொடக்க சேவைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்குகிறது. வேளாண் நீர் பாசனத்திற்குக் குளங்கள் அமைக்க சிறப்பு நிதியுதவி செய்கிறது.

2006-07-ஆம் ஆண்டில் ரூ. 1.18 கோடி நிகர லாபமாக இருந்த வங்கி, 2007-2008-ஆம் ஆண்டில் ரூ. 1.69 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வங்கி நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, மேலும் வங்கியின் வருவாய் மற்றும் இலாபம் மற்ற சந்தையாளர்களுடன் ஒப்பிடும்போது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 28-02-2010 அன்று வங்கி ரூ. 15.34 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது மற்றும் ரூ. 21.40 கோடி நிகர வட்டி வருமானத்தை பதிவு செய்துள்ளது.[6]

2025 நிதி மோசடி

[தொகு]

கடன்களை அனுமதிப்பதில் நடந்த முறைகேடுகள் வழக்கு தொடர்பாக அந்தமான் மற்றும் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே. முருகன் மற்றும் வங்கி ஊழியர் கலைவாணன் ஆகியோர் சூலை 2025 அன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.[7][8]பின் வங்கியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குல்தீப் ராய் சர்மாவும் கைது செய்யப்பட்டார்.[9][10]

நிதி மோசடி தொடர்பாக பப்லு ஹால்தர் (அந்தமான் மோர்மன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்), தருண் மொண்டல் (இயக்குனர் பிளேர் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்), அஜய் மின்ஸ் (முறையே அந்தமான் ட்ரீபி அட்வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்), கே. சுப்பிரமணியன் (அந்தமான் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குநர்) மற்றும் எம். சஜித் (அந்தமான் எஸ்கேபட்ஸ் உரிமையாளர்) உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]