அநுபூதி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அநுபூதி (நூல்) இத்தாலியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளரான அருகன் என்பவரால் எழுதப்பட்டு, புதிய தலைமுறைச் சங்கத்தால் 2003 ஆம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட ஒரு நூல் ஆகும். இது பல கட்டுரைகளையும், கவிதைகளையும் கொண்டுள்ள ஒரு தொகுப்பு நூலாகும். இது மனிதன் தன்னை உணர்ந்து மனிதனாக வாழவேண்டும் என்ற நோக்கத்துக்காக எழுதப்பட்டது என இதன் பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது.

இந் நூலில், இணைப்பு, பூஸ்பரிசம், ஒரு சில நிமிடங்கள், சாகடிக்கப்படும் சரித்திரம், தேசத்தின் புறத்திலும், ஆன்மீகப் பாதையும் ஆரோக்கிய வாழ்வும், உலகுக்கு உயிர் தந்த உத்தமர், உனக்குள்ளே, அவன்டத்திலும் ஈரமுண்டு, கவிஞரைப் பற்றி, தமிழ்த் தைத் திருவிழா, கரும் புலிகளின் இரும்பொலிகள். கடமையே கண்கண்ட் தெய்வம் ஆகிய கட்டுரைகளும், எண்ணங்களின் விம்பம் என்னும் கவிதைத் தொகுப்பும் அடங்கியுள்ளன.


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அநுபூதி_(நூல்)&oldid=1203380" இலிருந்து மீள்விக்கப்பட்டது