அநுத்தமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அநுத்தமா
பிறப்புஇராஜேசுவரி
(1922-04-16)16 ஏப்ரல் 1922
நெல்லூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்புமார்ச்சு 12, 2010(2010-03-12) (அகவை 87)
சென்னை, தமிழ்நாடு
அறியப்படுவதுபுதின, சிறுகதை எழுத்தாளர்
பெற்றோர்சேசகிரி ராவ்
வாழ்க்கைத்
துணை
பத்மநாபன்

அநுத்தமா (16 ஏப்ரல் 1922 – 3 திசம்பர் 2010) தமிழ்ப் பெண் எழுத்தாளர் ஆவார். ராஜேஸ்வரி பத்பநாபன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். 1950களில் 60களிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென் என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவையாகும்.

மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். 1956ல் இவருடைய பிரேமகீதம் என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா போன்ற அநுத்தமாவின் புதினங்கள் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • லக்சுமி
 • கௌரி
 • நைந்த உள்ளம்
 • சுருதி பேதம்
 • முத்துச் சிப்பி
 • பூமா
 • ஆல மண்டபம்
 • ஒன்றுபட்டால்
 • தவம்
 • ஒரே ஒரு வார்த்தை
 • வேப்பமரத்து பங்களா
 • கேட்ட வரம்
 • மணல் வீடு
 • ஜயந்திபுரத் திருவிழா
 • துரத்தும் நிழல்கள்
 • சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
 • ருசியான கதைகள்
 • அற்புதமான கதைகள்
 • பிரமாதமான கதைகள்
 • படு பேஷான கதைகள்
 • அழகான கதைகள்
 • சலங்கைக் காக்கை (பறவை இனங்கள்) (1959, வள்ளுவர் பண்ணை)
 • வண்ணக்கிளி (பறவை இனங்கள்) (1960, வள்ளுவர் பண்ணை)

விருதுகள்[தொகு]

 • அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு
 • மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949.
 • மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
 • தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு
 • தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அநுத்தமா&oldid=3613643" இலிருந்து மீள்விக்கப்பட்டது