அத்வைத அனுபவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து சமய
கருத்துருக்கள்
பிரம்மம்
ஆத்மா
மாயை
கர்மா
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
அர்த்தம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
லீலை
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்
ஜெபம்

அத்வைத அனுபவம் எனப்படுவது உபநிடத கால முனிவர்களின் அனுபவ வார்த்தைகளான அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மாக இருக்கிறேன்), தத்துவமசி (அது நீயாக இருக்கிறாய்), அயமாத்மா பிரம்மம், (இந்த ஆன்மா பிரம்மம்), போன்ற வேதாந்த மகாவாக்கியங்கள் காட்டுகின்ற உண்மை.

இவை ஆன்மீக வாழ்வின் உச்சநிலை அனுபவங்கள். இந்த அனுபவ நிலையில் தனிமனிதன், பிரபஞ்சம், அறிபவன் - அறிவு - அறியப்படும் பொருள் - அனுபவிப்பவன் - அனுபவம் - அனுபவப் பொருள் போன்ற வேறுபாடுகள் மறைந்து, ஆத்ம ஞானத்தால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற ஐக்கிய ஞானம் (அறிவு) உண்டாகிறது.

இது அனுபவத்திற்கு மட்டுமே உரியது, இந்த நிலை பற்றியே, ‘வாக்கையும் மனதையும் கடந்த நிலை’ என்று உபநிடதங்கள் கூறுகிறது. இந்த அத்வைத அனுபவத்தை வாக்கால் விளக்க இயலாது. அத்வைத அனுபவ நிலை பற்றி விளக்குவதற்கான எந்த முயற்சியும் வீண் முயற்சி என்பதை உபநிடதங்கள் அறுதியிட்டு உறுதியாக கூறுகின்றன. எனவே அத்வைத அனுபவம் தத்துவ விளக்கங்களுக்கு உரியது அல்ல.

கருவி நூல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்வைத_அனுபவம்&oldid=3231249" இருந்து மீள்விக்கப்பட்டது