அத்வைதா (ஆமை)
| அத்வைதா | |
|---|---|
| இனம் | ஆல்டாப்ரா இராட்சத ஆமை |
| பால் | Male |
| இறப்பு | 22 மார்ச்சு 2006 180-255 வயதில் விலங்கியல் தோட்டம், அலிபூர், கொல்கத்தா, இந்தியா |
| நிறை | 250 கிலோ |
அத்வைதா (Adwaita அண். 1750 – 22 மார்ச் 2006) என்பது இந்தியாவின் கொல்கத்தாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் வாழ்ந்த ஒரு ஆண் ஆல்டப்ரா இராட்சத ஆமை ஆகும். 2006 இல் இந்த ஆமை இறந்த போது, உலகின் மிக நீண்ட காலம் வாழ்ந்த விலங்குகளில் ஒன்றாக நம்பப்பட்டது.
கல்கத்தாவின் வடக்கு புறநகர்ப் பகுதியான பாராக்பூரில் உள்ள ராபர்ட் கிளைவின் தோட்டத்தில் வாழ்ந்த நான்கு ஆமைகளில் இந்த ஆமையும் ஒன்று என்று கூறப்படுகிறது. 1757 இல் பிளாசி போரில் வெற்றி பெற்ற பிறகு கிளைவுக்கு இந்த ஆமைகள் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது [1], இருப்பினும் இதற்கு ஆதாரமில்லை.
1875 அல்லது 1876 ஆம் ஆண்டுகளில், உயிர்காட்சிசாலையின் நிறுவனர் கார்ல் லூயிஸ் ஸ்வென்ட்லரால், அத்வைதா கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் உயிர்காட்சிசாலைக்கு மாற்றப்பட்டது.[2] 2006 மார்ச் 22 அன்று தன் 255 வயதில் இறக்கும் வரை, அத்வைதா உயிர்காட்சிசாலையில் உள்ள கூண்டில் வசித்து வந்தது.
250 கிலோ (551 பவுண்டு) எடை கொண்ட அத்வைதா ஒரு தனி விலங்காகும். அதன் சந்ததி பற்றிய எந்த பதிவுகளும் இல்லை. இது கோதுமை தவிடு, கேரட், கீரை, ஊறவைத்த பருப்பு ( கொண்டைக் கடலை ), ரொட்டி, புல் உப்பு ஆகியவற்றை உண்டுவந்தது.[1]
வயது
[தொகு]2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் ஓடு விரிசல் அடைந்தது. மேலும் விரிசலுக்கு அடியில் சதையில் ஒரு காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தால் பாதிக்கப்பட்டு, இறுதியில் 2006 மார்ச் 22 அன்று கல்லீரல் செயலிழப்பால் இது இறந்தது. அத்வைதா இறக்கும் போது 255 வயது என்று கூறப்படுகிறது, இருப்பினும் இந்தக் கூற்று ஆதாரமற்றது. அத்வைதாவின் வயது உண்மையாக இருந்தால், இதுவே அறியப்பட்ட மிகப் பழமையான ஆமையாக இருக்கும். ஹாரியட்டை விட 80 ஆண்டுகள், துய் மலிலாவை விட 67 ஆண்டுகள், தற்போது சாதனை படைத்த ஜோனதனை விட 63 ஆண்டுகள் மூத்ததாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Lal, Vinay (April 2006). "Clive and his Pet Tortoise". MANAS, UCLA Social Sciences (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 16 June 2020.
- ↑ "Zoological Garden". Proceedings of the Asiatic Society of Bengal: 23–24. February 1876. https://archive.org/stream/proceedingsofasi1876asia#page/n35/mode/2up.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Kolkata toasts 255-year-old resident". சிஃபி. Archived from the original on 27 April 2006. Retrieved 12 January 2019.
- "Worlds Oldest Animals". 29 June 2015 இம் மூலத்தில் இருந்து 2021-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/varchive/youtube/20211222/lJjrtn7bf4o.