அத்வைதா மல்லபர்மன்
அத்வைதா மல்லபர்மன் | |
|---|---|
| பிறப்பு | 1 சனவரி 1914 வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (present-day பங்களாதேசில் உள்ள கொமில்லா மாவட்டம் |
| இறப்பு | 16 ஏப்ரல் 1951 (அகவை 37) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கொமில்லா விக்டோரியா கல்லூரி |
| பணி | எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் |
அத்வைதா மல்லபர்மன் (Adwaita Mallabarman) இவர் இந்தியாவில் உள்ள வங்காளத்தில் வசித்த வந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் 1914 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். 1956 ஆண்டில் மரணத்திற்குப் பின் டைட்டாஸ் ஏக்தி நதிர் நாம்' (டைட்டாஸ் என்ற நதி) என்ற இவரின் நாவல் வெளியிடப்பட்டது.[1] இவர் ஆனந்தபஜார் பத்ரிகா, யுகாந்தர் மற்றும் தேஷ் ஆகிய பத்திரிக்கைகளில் சிறிது காலம் பணியாற்றி இருந்தார்.[2]இவரை அத்வைதா என்றும் அழைத்து வந்தனர்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]மல்லபர்மன், தற்போதைய பங்களாதேசின் கொமில்லா மாவட்டத்தில் உள்ள பிரம்மன்பாரியா நகருக்கு அருகில், டைட்டாசு என்ற ஆற்றின் கரையில் உள்ள கோகர்ணோகாட் கிராமத்தில் ஒரு மாலோ குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அந்த நேரத்தில் அது பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிக்கப்படாத வங்காளத்தில் இருந்தது வந்தது. இவர் நான்கு குழந்தைகளில் இரண்டாமவர் ஆவார். மல்லபர்மன் சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இவரது இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டனர். மேலும் இவரின் 20 ஆம் வயதில் கொல்கத்தாவுக்குச் செல்வதற்கு முன்பே, திருமணமான உடனேயே விதவையான இவரது சகோதரியும் இறந்துவிட்டார்.[3] மல்லபர்மன் சிறுவனாகவும், பதின்பருவத்தினராகவும், கல்லூரிக்குச் செல்லும் வரை தனது மாமாவுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த கிராமம் மற்றும் அருகிலுள்ள பகுதியின் மாலோ சமூகத்திலிருந்து பள்ளிக் கல்வியை முடித்த முதல் குழந்தை இவரே ஆவார். மாலோ சமூக உறுப்பினர்கள் இவரது பள்ளிச் செலவுகளுக்கும் முக்கியமாக புத்தகங்களுக்கும் உதவி செய்தனர். இவரது பள்ளிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இவர் பெற்ற கல்வி உதவித்தொகையால் கல்வி செலவுகள் ஈடுசெய்யப்பட்டது. இவருக்கு ஆதரவளிக்க சந்தாக்களைச் சேகரித்தனர். இவர் நகரத்தின் தொடக்கப் பள்ளி மற்றும் அன்னதா உயர்நிலைப் பள்ளியில் பயின்றூ வந்தார். மல்லபர்மன் 1933 இல் பள்ளியில் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். மேலும் கொமில்லா விக்டோரியா கல்லூரிக்குச் படிக்க சென்றார். இவர் 1934 இல் கல்லூரியை விட்டு வெளியேறி, இலக்கிய ஆசிரியராகப் பணியாற்ற கொல்கத்தாவுக்குச் சென்றார்.[4]
பணி வாழ்க்கை
[தொகு]அத்வைதா மல்லபர்மன் தனது பதின்பருவம் முழுவதும் அபரிமிதமாக எழுதி வந்தார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதினார்.மேலும் இவற்றை மாணவர் இதழ்களில் வெளியிட்டார். அந்த ஆரம்பகால எழுத்துக்கள் பெரிதும் இவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. எழுத்தாளர்களாக விரும்பிய சக மாணவர்கள், தங்கள் படைப்புகளைப் பதிப்பாளருக்கு அனுப்புவதற்கு முன்பு, அவற்றைப் பற்றி அத்வைதா மல்லபர்மனிடம் கருத்து கேட்கும் அளவிற்கு வளர்ந்து வந்தார்.[5]
கொல்கத்தாவில் மல்லபர்மனின் முதல் பணி, 'நவசக்தி' என்ற இலக்கிய மற்றும் செய்தி இதழின் உதவி ஆசிரியராக இருந்து வந்தார். இந்த இதழில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 'முகம்மதி' என்ற இலக்கிய மாத இதழில் தலையங்க உதவியாளராகப் பணியாற்றினார். இதில் இவர் தனது பல கவிதைகளையும், 'டைட்டாஷ் ஏக்தி நதிர் நாம்' (இது ரித்விக் கடக் என்பவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது) எனத் தெளிவாகத் தெரிந்த முதல் வரைவின் சில பகுதிகளையும் வெளியிட்டார். 'முகம்மதி'யின் முசுலிம் பதிப்பாளர் அந்த மாத இதழை மூடிவிட்டு இந்தியாவிலிருந்து குடிபெயரும் வரை இவர் அதில் தொடர்ந்து பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் இவர் 'ஆசாத்' என்ற செய்தித்தாளிலும் பணியாற்றினார். 1945-ஆம் ஆண்டில் இவர் 'தேஷ்' என்ற இலக்கிய வார இதழிலும், 'ஆனந்த பஜார் பத்ரிகா' என்ற நாளிதழிலும் சேர்ந்து பணியற்றினார். 1945 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை, இவரது பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் 'தேஷ்' மற்றும் பிற இதழ்களில் வெளியிடப்பட்டு வந்தன.
இறப்பு
[தொகு]1950 ஆம் ஆண்டில், மல்லபர்மனுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் உடல்நிலை மோசமடைந்து இருந்தார். அப்போதுதான் முடிக்கப்பட்ட 'டைட்டாஷ் எக்தி நதிர் நாம்' என்ற கையெழுத்துப் பிரதியை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே இவருக்கு நோய் மீண்டும் ஏற்பட்டது, இதனால் இவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், இவரது சிகிச்சையின் இரண்டாம் கட்டம் முடிவடைவதற்கு முன்பே, இவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இவர் 1951 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதம், 16 ஆம் தேதியன்று இறந்தார்.[1][6]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Ekhono boichhe Titas". [Anandabazar Patrika] (in Bengali). January 2014. Archived from the original on 25 January 2014. Retrieved 24 January 2014.
- ↑ Mallabarmaṇa, Advaita (1993). Bardhan, Kalpana (ed.). A River Called Titash. Voices from Asia (Reprint 2019 ed.). Berkeley, CA: [University of California Press]. ISBN 978-0-520-91318-9.
- ↑ "Advaita Mallavarman and Titas ekti nadir nam -Ali Akbar". Archived from the original on 25 March 2016. Retrieved 2 December 2017.
- ↑ Selina Hossain, Nurul Islam (1997). Bangla Akademi Charitabidhan (2nd ed.). Dhaka: [Bangla Akademy]. p. 6.
- ↑ Shantanu Qaisar (1987). Adwaita Mallabarman. [Bangladesh]: Bangla Academy. pp. 12, 72.
- ↑ Mallabarman, Adwaita (1993). "Appendix: Background Notes". A river called Titash. Translated by Bardhan, Kalpana. Berkeley: [University of California Press]. pp. 263–264. ISBN 0-520-08050-5.