உள்ளடக்கத்துக்குச் செல்

அத்ரிபிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்ரிபிஸ்
எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் காலத்திய நினைவுச் சின்னங்களின் எச்சம்
எகிப்தின் பத்தொன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் காலத்திய நினைவுச் சின்னங்களின் எச்சம்
அத்ரிபிஸ் is located in Egypt
அத்ரிபிஸ்
அத்ரிபிஸ்
ஆள்கூறுகள்: 30°28′00″N 31°11′00″E / 30.46667°N 31.18333°E / 30.46667; 31.18333
நாடுகீழ் எகிப்து

அத்ரிபிஸ் (Athribis), பண்டைய எகிப்தின் கீழ் எகிப்தில் அமைந்த நகரம். இது தற்கால கொய்ரோ நகரத்திர்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில், நைல் நதியின் கிளை நதியான டாமியெட்டா ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது.இந்நகரம் கிரேக்க தாலமி பேரரசு, ரோமானிய எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் கீழ் அத்ரிபிஸ் நகரம் இருந்தது.[1]

பின்னணி

[தொகு]

பண்டைய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த பத்தாவது நோமின் தலைநகராக அத்ரிபிஸ் நகரம் விளங்கியது.[1] பலெர்மோ கல்வெட்டில் எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச பார்வோன் சகுராவின் ஆட்சியில் அத்ரிபிஸ் நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளது.[2]ஹபுவின் மகன் அமென்கோதேப்பின் பிறந்த ஊராக அத்ரிபிஸ் நகரம் கருதப்படுகிறது.[3]ஹபுவின் மகன் அமென்கோதேப் மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் அரசு அலுவலர், கட்டிடக் கலைஞர், எழுத்தராக பணிபுரிந்தார். இவர் தனது செல்வாக்கை பயனபடுத்தி மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பை அத்ரிபிஸ் நகரத்தையும் அதன் உள்ளூர் கடவுளையும் ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.[4] அத்ரிபிஸ் நகரத்த்தில் மன்னர் மூன்றாம் அமென்கோதேப் கட்டிய கோயிலை 18ஆம் வம்ச ஆட்சியின் போது மறுசீரமைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இக்கோயில் நீடித்து நிலைக்கவில்லை.[5]

தாலமி ஆட்சியில்

[தொகு]

கிரேக்க தாலமி வம்ச ஆட்சியின் போது, பத்தாவது நோமின் தலைநகராக அத்ரிபிஸ் நகரம் இருந்தது. மேலும் இந்நகரத்தில் மண்பாண்ட தொழில்கள் சிறந்து விளங்கியது.[1] கிபி நான்காம் நூற்றாண்டு வரை பைசாந்தியப் பேரரசு ஆட்சியில் அத்ரிபிஸ் நகரம் மண் விளக்கு தொழில் சிறந்து விளங்கியது.

தொல்பொருள் கண்டுபிடிப்புகள்

[தொகு]
அத்ரிபிஸ் நகரம், ரோமானிய எகிப்து காலத்திய குடியிருப்பு

அத்ரிபிஸ் நகர அகழாய்வில் கிரேக்க தாலமி வம்ச காலத்திய 300 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டது.[1] பண்டைய எகிப்திய மற்றும் கிரேக்க கடவுளரின் களிமண் சிற்பங்கள், எண்ணெய் விளக்குகள், குளியலறைகள் கண்டறியப்பட்டது.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 Mysliwiec 2013.
  2. Rowland, Joanne (2011). "An Old Kingdom mastaba and the results of the continued excavations at Quesna in 2010". The Journal of Egyptian Archaeology 97: 11–29. doi:10.1177/030751331109700102.
  3. Mysliwiec & Poludnikiewicz 2003.
  4. Doffinger, André. "Inscriptions of Amenhotep, son of Hapu". reshafim.org.il. Archived from the original on 28 டிசம்பர் 2017. Retrieved 20 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Petrie 1908.
  6. Szymanska 1999.

உசாத்துணை

[தொகு]
  • Mysliwiec, Karol (1992). "Polish-Egyptian Excavations at Tell Atrib in 1991". Polish Archaeology in the Mediterranean 3: 24–28. 
  • Mysliwiec, Karol (2013). "Archaeology Meeting Geophysics on Polish Excavations in Egypt". Studia Quarternaria 30 (2): 45–59. 
  • Mysliwiec, Karol; Poludnikiewicz, Anna (2003). "A Center of Ceramic Production in Ptolemaic Athribis". Contributions of the University of California Archaeological Research Facility. The George and Mary Foster Anthropology Library. pp. 133–152.
  • Petrie, William Matthew Flinders; Walker, J. H.; Knobel, Edward Ball (1908). Athribis. School of archaeology in Egypt.
  • Szymanska, Hanna (1999). "Tell Atrib: Excavations, 1998". Polish Archaeology in the Mediterranean 10: 71–76. 
  • Szymanska, Hanna (2000). "Tell Atrib: Excavations, 1999". Polish Archaeology in the Mediterranean 11: 77–82. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்ரிபிஸ்&oldid=4563477" இலிருந்து மீள்விக்கப்பட்டது