அத்திலாந்திக் சாசனம்
அத்திலாந்திக் சாசனம் Codename: Riviera | ||
---|---|---|
இடம்பெற்ற நாடு | நியூஃபவுண்ட்லாந்து | |
தேதி | 9–12 ஆகத்து 1941 | |
இடம் | அர்ஜென்டியாவின் கடற்படை நிலையம், பிளசண்டியா விரிகுடா | |
பங்குகொள்வோர் | பிராங்க்ளின் ரூசவெல்ட் வின்ஸ்டன் சர்ச்சில் | |
முன்னையது | முதல் கூட்டணிக் கூட்டம் | |
பின்னையது | ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனம் | |
Key points | ||
|
அத்திலாந்திக் சாசனம் (Atlantic Charter) என்பது 14 ஆகத்து 1941 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும். இதில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகாக உலகத்தில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் சில இலக்குகளை நிர்ணயித்தது. பின்னர் அத்திலாந்திக் சாசனம் சாசனம் என்று அழைக்கப்பட்ட கூட்டு அறிக்கை, போருக்குப் பிந்தைய உலகத்திற்கான அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நோக்கங்களை பின்வருமாறு கோடிட்டுக் காட்டியது; நாட்டுச் சார்பாகவோ பிற நிலையிலோ இரு நாடுகளும் தங்கள் நலம் பேணுவதில்லை, நாட்டு ஆட்சிக்குரிய மாற்றங்களை மக்கள் விருப்பத்துடன் செய்தல், மக்களின் உரிமைகளை மதிப்பது; அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பது; உரிமைகள் பறிக்கப்பட்ட நாடுகளுக்குத் தன்னாட்சி உரிமையும் முழு ஆட்சி உரிமையும் அளித்தல் அல்லது பெறுமாறு செய்தல். எல்லா நாடுகளும், ஒத்த நிலையில், தங்கள் பொருள் வளத்திற்குரிய மூலப் பொருள்களைப் பெறுவதற்கும்; வாணிபத்தை நடத்துவதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள முயற்சி செய்தல். பொருளாதாரத் துறையில் எல்லா நாடுகளுக்கிடையில் நிறைந்த தொடர்பு இருத்தல். இதனால் உழைப்பு நிலை உயரவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், சமூகப் பாதுகாப்பு உண்டாகவும் வழியுண்டு. நாஜி கொடுமை அழிந்தபின் எல்லா நாடுகளில்லும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்தல். தங்கு தடையின்றி எல்லோரும் திரைகடல் ஓடுவது. விரிந்த, நிலையான சமூகப் பாதுகாப்பை நிறுவும் முயற்சியைத் தள்ளி வைத்தல்; அமைதி கருதிப் போர்க் கருவிகளைக் குறைத்தல் அல்லது படைக் குறைப்பு செய்தல். சாசனத்தின் ஆதரவாளர்கள் 1 சனவரி 1942 அன்று ஒன்றிணைந்த நாடுகள் அவையின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது நவீன ஐக்கிய நாடுகள் அவைக்கு அடிப்படையாக இருந்தது.
இந்த சாசனம் போருக்குப் பிறகு பல பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஊக்கமளித்தது. பிரித்தானியப் பேரரசை அகற்றுவது, நேட்டோவின் உருவாக்கம் மற்றும் கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் அனைத்தும் அத்திலாந்திக் சாசனம் சாசனத்திலிருந்து பெறப்பட்டவையே. 2021 ஆம் ஆண்டில், " புதிய அத்திலாந்திக் சாசனம் சாசனம் " என்ற பெயரில் அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய தலைமை அமைச்சர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கார்ன்வாலில் நடந்த முதல் சந்திப்பில் கையெழுத்திட்டனர். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Biden, Johnson sign new Atlantic Charter on trade, defense amid Covid recovery". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.