அத்தியூர்க் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தியூர்க் கோவை என்பது பெருமாள்மீது பாடப்பட்ட [[கோவை (இலக்கியம்) |கோவை]] நூல்.

இந்த நூலின் பாடல் ஒன்று இலக்கண விளக்கம் [1] என்னும் நூலுக்கு எழுதிய உரையில் [2] மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

அடங்கா அசுரர் குலமறுத் தோர்அந்தி யூர்வென்றி
மடங்காத நேமி வரதர்தன் நாட்டில்தன் மைந்தனுடன்
முடங்காமல் அந்த மனைவியும் போய்முயன்(று) ஊரனுடன்
தடங்காவும் யாறும் குளனும்சென் றாள்தட வும்தக்கதுவே.
பாடல் சொல்லும் பொருள்
காஞ்சிபுரத்து அத்தியூர் வரதன் [3] நாட்டில் மனைவி ஊரனுடன் தடவு, யாறு, குளன் முதலானவற்றைக் கடந்துசென்றாள். இதுதான் அவளுக்குத் தக்க செயல்.
காலம்
இந்த நூலின் பா நடையையும், பாடற்பொருளையும் கருத்தில் கொண்டு எண்ணும்போது இது 15ஆம் நூற்றாண்டு தூல் எனலாம்.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 17ஆம் நூற்றாண்டு
  2. பொருளதிகாரம் நூற்பா 90 உரை
  3. இக்காலத்துச் சின்னகாஞ்சி வரதராசப் பெருமாள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தியூர்க்_கோவை&oldid=1240743" இலிருந்து மீள்விக்கப்பட்டது