அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடுகையாற்றில் வடகரையில் உள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

அகத்தியருக்குத் திருமண கோலம் காட்டியதால் அம்மையப்பர் கல்யாணசுந்தரராகக் காட்சியளிக்கின்றார்.[1]

அமைப்பு[தொகு]

தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் மூலவராக உள்ள லிங்கத்திருமேனியின் பின்புறம் கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மாண்டவிய முனிவரின் சாபத்தினால் காட்னையாகத் திரிந்த சேரித்துவஜன் என்றழைக்கப்படும் பாண்டிய மன்னனும், புலிக்கால் முனிவரும் வழிபட்டதால் அத்தி-புலியூர் என்று பெயர் பெற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]