அத்தாசு துரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தாசு துரானி ( Attash Durrani உருது: عطش درانی  ; 22 ஜனவரி 1952 - 30 நவம்பர் 2018) ஒரு பாகிஸ்தான் மொழியியலாளர், ஆராய்ச்சியாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் ரத்தினவியலாளர் ஆவார். அவர் 275 க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் செயலிகளை பற்றி எழுதினார். இவர் உருது மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 500 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் அனைத்தும் மொழி, கல்வி மற்றும் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் உருது மொழி மற்றும் இலக்கியப் பணிகளுக்காக இவரின் சேவையினைப் பாராட்டி தம்கா-இ-இம்தியாஸ் [1] மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் ஆகிய விருதுகளைப் பெற்றார்.[2] அவர் 30 நவம்பர் 2018 அன்று காலமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

துரானி 1991 ல் லாகூரின் பஞ்சாப் பல்கலைக்கழக ஓரியண்டல் கல்லூரியில் உருது சொற்பிறப்பியலில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.[3][4] இவர் உருது பாடநூல்களை வடிவமைப்பதில் வல்லுநராகத் திகழ்ந்துள்ளார்.

அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், லாகூரில் புள்ளிவிவரங்கள் பற்றிய படிப்பு, பத்திரிகை, திட்ட மேலாண்மை,மற்றும் பாடத்திட்டம் மற்றும் உரை புத்தக மேம்பாட்டு படிப்புகளில் சான்றிதழ்களைப் பெற்றார். பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் (பிபிஎம்ஐ), இஸ்லாமாபாத், பிராட்போர்டு பல்கலைக்கழகம் (யுனைடெட் கிங்டம்); காம்சேட்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இஸ்லாமாபாத், பாகிஸ்தான்; திட்ட மேலாண்மை நிறுவனம் (பிஎம்ஐ) (யுஎஸ்); தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NUST), இஸ்லாமாபாத், பாகிஸ்தான்; மற்றும் சர்வதேச கல்வி பணியகம் (IBE), யுனெஸ்கோ, ஜெனீவா. உருது, பஞ்சாபி, இக்பாலியட், மொழியியல் போன்ற பிரிவுகள் மற்றும் கல்லூரிகளில் இவர் பயின்றுள்ளார்.மொழிபெயர்ப்பு போன்ற பணிகளையும் செய்துள்ளார். கல்வி, தகவல், மற்றும் கணினி அறிவியல் திட்டங்கள் / ஆய்வறிக்கைகள் குறித்து பல மாணவர்கள் எம்.பில், எம்.எஸ்., பி.எச்.டி ஆய்வுகள் சமர்ப்பிப்பதற்கு உதவினார்.

தொழில்[தொகு]

துரானி உருது மற்றும் ஆங்கில மொழிகளில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.[5] உருது மொழி மற்றும் இலக்கியம், மொழியியல், கல்வி, கல்வியறிவு, பாடத்திட்டம் மற்றும் பாடநூல் மேம்பாடு, உருது தகவல், ஆராய்ச்சி, போன்ற பிரிவுகளில் இவர் எழுதி வந்துள்ளார்.[6][7] மேலும் சொற்களஞ்சியம், நூலியல் மற்றும் கலைக்களஞ்சியம், மற்றும் இக்பால் ஆய்வுகள், பாகிஸ்தான் ஆய்வுகள், ரத்தினவியல், வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம். போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ளார்.[8][9]

உருது மொழிக்கான மைக்ரோசாஃப்ட் உள்ளூர் மொழி திட்டத்தின் முதல் பொறுப்பாளராக இவர் இருந்தார்.[10] பாக்கிஸ்தானின் தேசிய மொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பு, அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியம் பணியகத்தின் தலைவராகவும் இருந்தார்.[11] இவர் உருது தகவல்தொடர்பு திட்டமானது உருது தகவல் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக வெளியிடப்பட்டது. இந்த திட்டமானது உருது மொழியினை ஆராய்ச்சி செய்தல் மற்றும் உருது கணினிகளில் பயன்படுத்துவதற்கான மேம்பாட்டுடன் தொடர்புடையது ஆகும் [8][12]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

பாகிஸ்தான் குடியரசுத் தலைவர், உருது இலக்கியம் மற்றும் உருது தகவல்தொடர்புக்கான இவரின் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக இவருக்கு தேசிய குடிமைப் பணி விருதான 2010 ஆம் ஆண்டிற்கான தம்கா-இ-இம்தியாஸ் விருதினை அளித்தார். இது 23 மார்ச் 2011 அன்று வழங்கப்பட்டது.[13] குடிமைப் பணி விருதுகளில் உயரியதாக கருதப்படும் சீதாரா -இ-இம்தியாசு விருது பாகிஸ்தான் குடியரசுத் தலைவரால் 14 ஆகஸ்ட் 2015 அன்று அறிவிக்கப்பட்டு 23 மார்ச் 2016 அன்று வழங்கப்பட்டது

[2] இக்பால் கா இன்சிக்ளோபீடியா மற்றும் பாகிஸ்தான் உருது ஆகிய இவரது புத்தகங்கள் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றன.[14] பாக்கித்தானிய மொழிகளை மேம்படுத்துவதில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. "President awards 'Tamgha-i-Imtiaz' to Attash Durrani". International The News. 3 April 2011 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225220625/https://www.thenews.com.pk/print/14584-elahi-flays-sharif-brothers-on-nandipur-power-project. பார்த்த நாள்: 16 March 2014. 
  2. 2.0 2.1 "PID".
  3. "www.urduworkshop.sdnpk.org". www.urduworkshop.sdnpk.org. Archived from the original on 24 January 2016. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  4. "Version 6.0 Technical Contributors". Unicode.org. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  5. "Archived copy". Archived from the original on 23 December 2008. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "The scientific & technical dictionary: Amazon.co.uk: Dr.Attash Durrani (ed): Books". Amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  7. "Special Dictionary". www.special-dictionary.com.
  8. 8.0 8.1 "Fishpond.co.in - Shop Online with Free Delivery on 10 million Books, DVDs, Toys & More Worldwide". www.fishpond.co.in. Archived from the original on 1 January 2015.
  9. 9.0 9.1 [Kristen Nehemiah Horst, Attash Durrani, Dign Press, MU, US, ISBN 6139918359]
  10. "Microsoft Local Language Program Quote Sheet". Microsoft.com. 16 March 2004. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  11. "Microsoft Local Language Program Quote Sheet". Microsoft.com. 16 March 2004. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  12. "Institute for Urdu Informatics By Dr. Attash Durrani | اردو محفل فورم". Urduweb.org. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "President awards 'Tamgha-i-Imtiaz' to Attash Durrani". Thenews.com.pk. Archived from the original on 11 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 September 2013.
  14. Pakistani Urdu. http://www.bestwebbuys.com/Pakistani_Urdu_Ke_khadokhal-ISBN_9789694741765.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாசு_துரானி&oldid=3540891" இலிருந்து மீள்விக்கப்பட்டது